ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் பொது உருவாக்கப்படும் உலக வானிலை அரங்கில், காலநிலை மாற்றத்தை விளக்குவதற்கான உயர் அறிவியல் தொழில் நுட்பம் கொண்ட மின்னணு வசதிகள் காட்சிக்கு வைக்கப்படும். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் எதிர்கால தீமைகளை இந்த வசதிகள் சுட்டிக்காட்ட முடியும்.
உலகப் பொருட்காட்சி நடத்தப்பட்ட 157 ஆண்டுகால வரலாற்றில், வானிலை என்ற தலைப்பில் சிறப்பாக உருவாக்கப்படும் முதலாவது அரங்கு இதுவாகும். உலக காலநிலை மாற்றத்தால் நகரங்களுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் ஏற்படும் மாபெரும் பாதிப்புகளை இப்பொருட்காட்சியில் கலந்து கொள்வோர் அறிந்து கொள்ள வேண்டும். அத்துடன், சீரான மாசுபாடற்ற தூய்மையான வாழ்க்கை வாழும் வழிமுறைகளை மக்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று இப்பொருட்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் விரும்புகின்றனர்.
|