• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-17 14:57:23    
தாஹுவொஃபாங் நீர்த்தேக்கம்

cri

தாஹுவொஃபாங் நீர்த்தேக்கம், சீனாவின் லியாவ்நிங் மாநிலத்தின் ஃபூஷூன் நகரிலுள்ள ஹுன்ஹே ஏரியில் கட்டியமைக்கப்பட்டுள்ளது. அதன் பரப்பளவு, 5437 சதுரக் கிலோமீட்டராகும். அதன் மொத்த கொள்ளளவு, 218 கோடியே 10 இலட்சம் கன மீட்டராகும். அணைக்கட்டு உயரம், 48 மீட்டராகும். அணைக்கட்டு மேற்பரப்பின் நீளம், 1366.7 மீட்டராகும்.

1958ம் ஆண்டு, கட்டியமைக்கப்பட்ட இது, ஷேன்யாங் மற்றும் ஃபூஷூன் நகரங்களுக்கு நீர் வளம் தந்து செழிப்பு அளிக்கிறது.

இது, சீனாவின் முதல் ஐந்தாண்டு திட்டகாலத்தில் கட்டப்பட்ட முதலாவது மிக பெரிய நீர்த்தேக்கமாகும். அப்போது, அது, சீனாவில் 2வது பெரிய நீர்த்தேக்கமாக திகழ்ந்தது. தற்போது, ஷேன்யாங் மற்றும் ஃபூஷூன் நகரங்களில் வாழும் குடிமக்களின் குடி நீருக்கான முக்கிய தோற்றுவாயாகும்.

அது, நீண்டகால வரலாற்றைக் கொள்கிறது. வசந்தம் மற்றும் இலையுதிர் காலம், போரிடும் நாடுகள் காலம் ஆகிய காலங்களில், இங்கு மக்கள் வாழ்ந்தனர். இதன் நினைவாக இங்கு, அதிகமான வரலாற்று சிதிலங்களும் காணப்படுகின்றன.

வெள்ள பெருக்கு தடுப்பு, நீர் வினியோகம், நீர் பாசனம், மின்சார உற்பத்தி, மீண் வளர்ப்பு முதலிய பெரிய நீர் சேமிப்புத் திட்டப்பணிகளில் அது பயன்படுத்தப்பட்டுள்ளது.