சீனத் தேசிய மக்கள் பேரவையின் 5 திபெத் பிரதிநிதிகள் உருவாகிய பிரதிநிதிக் குழு, அண்மையில் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டது. அவர்கள், தமது அனுபவங்களைப் விளக்கி கூறி, அமெரிக்காவில் பல்வேறு துறையினரிடம், உண்மையான திபெத்தை அறிமுகப்படுத்தினர்.
திபெத் இன மக்கள், தனிநபர் சுதந்திரத்தைக் கொள்கின்றனர். இது மட்டுமின்றி, அவர்களது மத நம்பிக்கையும் அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் சட்டத்தால் முழுமையாக உத்தரவாதம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் 14ம் நாள் நிகழ்ந்த லாசா வன்முறை சம்பவம், தாலாய் லாமாக் குழு வர்ணித்த அமைதியான பேரணி அல்ல. இச்சம்பவம், அடிதடி, சீர்குலைத்தல், கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் கொண்ட வன்முறைசெயலாகும். பிரதிநிதிக் குழுவின் தலைவரும், சீனத் தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதியும், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டியின் துணைத் தலைவருமான Shinza•Tenzin Choeta இவ்வாறு கூறினார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர், அமெரிக்க அரசின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். திபெத், சீனாவின் உரிமை பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். அமெரிக்கா திபெத் சுதந்திரத்தை எவ்விதத்திலும் ஆதரிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
|