• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-17 20:26:04    
சீனாவின் பதிப்புரிமை வர்த்தக மையம்

cri

அண்மையில், சர்வதேச பதிப்புரிமை வர்த்தக மையம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. இது, சீன பதிப்புரிமை பாதுகாப்பு மையமும், பெய்ஜிங் கிழக்குப் பிரதேச அரசும் கூட்டாக ஏற்பாடு செய்து வருவானதாகும். சீனாவின் முதலாவது தேசிய பதிப்புரிமை வர்த்தக மையமாக இது அமைகிறது. சீனாவின் மிகப் பெரிய, அதிகாரம் தன்மை வாய்ந்த பதிப்புரிமைப் படைப்புக்கான பதிவு மையமாகவும், பதிப்புரிமைக்கான பன்நோக்கு வர்த்தகச் சந்தை மற்றும் பதிப்புரிமை நிதியின் இயங்கு மேடையாகவும் இது விளங்குகின்றது.


பதிப்புரிமை வர்த்தகத்தின் புதிய வழியை சீன பதிப்புரிமைப் பாதுகாப்பு வாரியங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருவதை இது எடுத்துக்காட்டுகிறது. ஆகையால், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புப் பணி, மேலும் பயன் தரும் முறையில் நடைமுறைப்படுத்தப்படலாம்.


உலகில் புகழ் பெற்ற பெய்ஜிங் மாநகரின் zhonguancun மண்டலத்தின் yonghe பகுதியில், சர்வதேச பதிப்புரிமை வர்த்தக மையம் நிறுவப்பட்டது. துவக்க விழாவில், சீனத் தேசிய பதிப்புரிமை ஆணையத்தின் துணைத் தலைவர் yanxiaohong உரையாற்றினார். பதிப்புரிமை வர்த்தகத்துக்கான நிலையான மேடையை உருவாக்குவது, பதிப்புரிமையுடன் தொடர்புடைய துறையின் வளர்ச்சியை முன்னேற்றும் முக்கிய நடவடிக்கையாகும். சீனச் சந்தையின் பொருளாதார அமைப்புமுறை, இன்னும், முழுமைப்படுத்தப்படவில்லை.

அதேவேளையில், பதிப்புரிமைப்பணி, பல்வேறு பதிப்புரிமைப் படைப்புகளின் வர்த்தகம் சீராக இயங்காமை போன்ற பிரச்சினைகளும் நிலவுகின்றன. இதனால், பதிப்புரிமையுடன் தொடர்புடைய துறைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.


நண்பர்களே, சீனாவின் பதிப்புரிமை வர்த்தக மையம் என்ற தகவலை அறிந்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.