• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-17 11:13:10    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிகளை பற்றிய உங்களது கருத்துக்களின் தொகுப்பாக வலம் வரும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
க்ளீட்டஸ்: நாள்தோறும் எமது நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டு, நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்களையும், விமர்சனங்களையும் எழுதி அனுப்பி வரும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் இந்த வேளையில் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்
கலை: நிகழ்ச்சிகளை கேட்பதோடு நின்றுவிடுபவர்கள், உங்கள் கருத்துக்கள் எமக்கு ஊக்கமளிக்கும் என்பதை நினைவில் கொண்டு கடிதங்கள் அல்லது மின்னஞ்சல்கள் வாயிலாக அவற்றை எமக்கு எழுதியனுப்புங்கள்.
க்ளீட்டஸ்: தொடர்ந்து எமது நிகழ்ச்சிகளை கேளுங்கள். மறவாமல் நிகழ்ச்சிகளை பற்றிய உங்கள் எண்ணங்களை கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களூடாக எழுதியனுப்புங்கள் என்ற வேண்டுகோளுடன், இன்றைய நிகழ்ச்சிக்கு செல்கிறோம்.
கடிதப்பகுதி
கலை: இன்றைய நிகழ்ச்சியின் முதல் கடிதம் மெட்டாலா எஸ். பாஸ்கர் எழுதியது. மக்கள் சீனம் நிகழ்ச்சியில் சீனப் பொருளாடாரத்தின் வளர்ச்சி பற்றி கூறப்பட்டது. நூற்று முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட வளரும் நாடாக சீனா இருந்தபோதிலும் இயற்கைச் சீற்றம், நிதி நெருக்கடி போன்ற இன்னல்களை சமாளித்து 2008ம் ஆணு ஆகஸ்டு திங்களில் வெற்றிகரமாக ஒலிம்பிப் போட்டியை நடத்திக்காட்டியது பாராட்டுக்குரியது. பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைய மக்கள் அனைவரும் பாடுபடுவதே சர்வதேசச் சமூகத்தில் சீனா ஒரு முக்கிய நாடாக திகழ்வதற்கு காரணமாக அமைகிறது.
க்ளீட்டஸ்: அடுத்து முனுகப்பட்டு பி. கண்ணன் சேகர் எழுதிய கடிதம். சீன தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சியில் திபெத் முழுமையான பொருளாதார நிறைவோடு தன்னிறைவு கண்டுள்ளதை பற்றி கூறும்போது கடந்த 50 ஆண்டு கால வரலாற்றை கண்முன் கொண்டு வந்தது போல் இருந்தது. அரசியல், பண்பாடு, கல்வி ஆகிய துறைகளில் வளர்ச்சி காண சீன நடுவணரசு பலவகை உதவிகளை உதவி செய்துள்ளதை மறக்க இயலாது.
கலை: அடுத்து இலங்கை காத்தான்குடி ஏ.எஃப். ஷிஃப்னா எழுதிய கடிதம். சீன வானொலியில் இடம்பெறும் இன்பப்பயணம், இசை நிகழ்ச்சி போன்றவை சோகமாக இருக்கும்போது மனதுக்கு புத்துணர்ச்சியூட்டுவதாக அமைகின்றன. அறிவியல் உலகம் நிகழ்ச்சி வியத்தகு செய்திகளை அறியத்தருகிறது. அருமையான நிகழ்ச்சிகளை வழங்கும் சீன வானொலிக்கு நன்றி.


க்ளீட்டஸ்: மதுரை 20. என். ராமசாமி எழுதிய கடிதம். 2008ம் ஆண்டுக்கான அறிவியல் தொழில்நுட்ப விருது குறித்த செய்தித்தொகுப்பை கேட்டேன். இரண்டு அறிஞர்களுக்கு உயர் விருது வழங்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியின் பின்னணியிலும் அறிவியல் தொழில்நுட்ப சாதனைகளுக்கான விருது அளிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்தது என்றே தோன்றுகிறது.
கலை: சீன மகளிர் நிகழ்ச்சி குறித்து கடையாலுருட்டி எம். பிச்சைமணி எழுதிய கடிதம். குதிரையேற்றம் பயின்ற சீனாவின் வீராங்கனை பற்றிய கட்டுரையை கேட்டேன். டென்மார்க் நாட்டில் பயிற்சி செய்தது, பயிற்சியின் ஒரு பகுதியாக குதிரையை கூட தானே கழுவியது என்று கடினமான பயிற்சியின் விளைவாக ஒலிம்பிக் போட்டியில் குதிரையேற்றக்கலை விளையாட்டில் அவர் பங்கேற்க முடிந்தது என்பதை அறிந்தேன்.
க்ளீட்டஸ்: இலங்கை காத்தான்குடி இ. பா. நுஸ்ரா எழுதிய கடிதம். சீன வானொலியை கேட்கத் துடிக்கும் நேயர்கள் பலரில் நானும் ஒருவள். மாணவர்களுக்கு கல்வியில் துணையாகும் தகவல்கள் பல் உங்கள் நிகழ்ச்சிகளில் இடம்பெறுவதால் மேலும் சிறப்பு. எங்கள் பகுதியில் சீன வானொலியை கேட்காதவர்களே இல்லை என்று கூறலாம்.
கலை: சீனக் கதை நிகழ்ச்சி குறித்து காளியப்பம்பாளையம் ராகம் பழனியப்பன் எழுதிய கடிதம். வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்திய வேந்தன் என்ற கதையில், திருமணம் முடிதத சில நாட்களிலேயே வெள்ளத்தை தடுக்கச் சென்று 14 ஆண்டுகள் கழித்து வீடு திரும்பிய லூ என்பவரை பற்றிய கதை சிறப்பாக இருந்தது. நாட்டுப்பற்றுள்ள கதை.
க்ளீட்டஸ்: நாகர்கோவில் பிரின்ஸ் ராபர்ட் சிங் எழுதிய கடிதம். சீனா வளரும் நாடுகளுக்கு வழங்கிய உதவி பற்றி செய்தித்தொகுப்பு கேட்டேன். 1963ம் ஆண்டு முதல் தற்போது 2008ம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் வரை 20 ஆயிரம் மருத்துவர்கள் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு சீனா அனுப்பியுள்ளது. முதலாளித்துவ நாடுகளை போன்று எந்த கட்டுப்பாடுமின்றி, வளரும் நாடுகளுக்கு சீனா உதவி செய்வதை கட்டுரை மூலம் அறிந்துகொண்டேன்.
மின்னஞ்சல் பகுதி
வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்
பிப்ரவரித் திங்கள் 23 ஆம் நாள் இடம்பெற்ற இரண்டாவது •செய்தித் தொகுப்பு• நிகழ்ச்சியில் •இந்தியாவும் ஆஸ்கர் விருதுகளும்• என்ற கட்டுரையைக் கேட்டேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று, இந்த கட்டுரையை ஏற்பாடு செய்து வழங்கிய தமிழ்ப்பிரிவுத் தலைவர் தி.கலையரசி மற்றும் முனைவர் ந.கடிகாசலம் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இப்போது எங்கே சென்றாலும், தமிழர் ஒருவர் திரைப்படப்படத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருது பெற்றதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், காலதாமதமின்றி கட்டுரையை இடம்பெறச் செய்தமைக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


ஊட்டி, S.K.சுரேந்திரன்
பிப்ரவரித் திங்கள் 25ஆம் நாள் அன்று ஒலிபரப்பான விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சியில் உலக பல்கலைக்கழக குளிர்கால விளையாட்டு போட்டி சீனாவின் வட கிழக்கு பகுதியிலுள்ள ஹார்பின்னில் துவங்கியதை பற்றிக் கேட்டேன். இப் போட்டியின் 1500 மீட்டர் மகளிர் பிரிவு சறுக்குப்போட்டியில் 18 வயதான சீனாவின் இளம் வீராங்கனை சூ யாங் சீன பிரதிநிதிக் குழுவின் முதல் தங்கப் பதக்கத்தை பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது. சீன வீராங்கனை சூ யாங்கிற்கு எனது இதயப் பூர்வமான பாராட்டுக்கள்.
ஈரோடு, ஆர். சுகுணா
அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் ஹேனான் பகுதியில் ஏற்பட்ட வறட்சியை போக்க செயற்கை மழை பெய்யச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றிகண்டதை அறிந்து மகிழ்ந்தேன். மேலும் செயற்கை மழை பெய்ய அறிவியல் ரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் விளக்கியது என் போன்ற நேயர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. பயனுள்ள நிகழ்ச்சிகளை வழங்கும் சீன வானொலிக்கு எனது வாழ்த்துக்கள்.
விஜயமங்கலம், குணசீலன்
நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலைவாணன் ராதிகா அவர்களின் சீன வானொலி அனுபவங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது...சீன வானொலி மன்றம் தொடங்கிய ஆண்டிலேயே அவருக்கு ஆசிரியப் பணி கிடைத்தது அவருக்கு மட்டுமல்ல நமக்கும் பெருமையே. கலைவாணனுக்கு வாழ்த்துக்கள்.


பாண்டிச்சேரி, N. பாலகுமார்
திபெத் மக்களின் புத்தாண்டு பற்றிய செய்தியை கேட்டேன். உலக மக்கள் அவரவர் இனத்திற்குரிய பாரம்பரிய முறைபடி புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனுபவித்து மகிழ்வது வழமை. திபெத் மக்க்ள் பெரும்பாலும் புத்தமதத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால், அவர்களின் புத்தாண்டு மிக எளியமுறையில் கொண்டாடுவர்கள் என்று நினைத்து இருந்தேன். அவர்களும் பெரும் வரவேற்புடன் புத்தாண்டாடை வரவேற்றதை நிகழ்ச்சி வழியாக கேட்டு மகிழ்ந்தேன். திபெத் மக்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துகளை வானொலி மூலமாக தெரிவித்து கொள்கின்றேன். எளிமையும், அமைதியும், உழைப்பும், இறைநம்பிக்கையும் உள்ள அவர்கள் ஒளிமையான வாழ்வில் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகின்றேன்.
。。。。。。செந்தலை N.S. பாலமுரளி。。。。。。
பிப்ரவரி 19ம் நாளன்று பாலஸ்தீன இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கை பற்றிய செய்திகளை கேட்டறிந்தேன். ஜனவரித் திங்களில் ஐ.நா.பாதுகாப்பு அவை உருவாக்கிய 1360வது தீர்மானத்தை இரு நாடுகளும் பின்பற்ற வேண்டும். உலக அமைதிக்காக ஐ.நா. போராடி வருகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பாலஸ்தீனமும், இஸ்ரேலும் இதனை செயல்படுத்தி பன்முக போர் நிறுத்தத்தை வெகுவிரைவில் நனவாக்க வேண்டும் என ஐ.நா.. சிறப்பு ஒருங்கிணைப்பாளர் Robert H.Seery கேட்டுக் கொண்டிருப்பது பாராட்டப்பட வேண்டும். இது இரு நாடுகளின் கையில்தான் உள்ளது. நன்றி.
。。。。。。விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன்。。。。。。
24.2.2009 அன்று செய்திகள் கேட்டேன். அதில் ஐ.நா.வின் தொழில்துறை வளர்ச்சி நிறுவனம் சென்னை நகரை உலக தலைசிறந்த 10 தொழில்துறை நகரில் ஒன்றாக தேர்வு செய்துள்ளது என்ற செய்தி கேட்டு பெருமையாக இருந்தது. இந்த தேர்வுக்கு காரணம் சென்னை பகுதியில் தோல் தொழில் துறை மிகவும் சிறப்பாக செயல்படுவதே காரணம். மேலும் உலக தோல்தொழில் துறை உற்பத்தியில் சென்னை 6 விழுக்காடு பங்கு வகிக்கிறது என்றும் விளக்கமாக விரிவாகக் கூறப்பட்டது. இங்கு தமிழகத்தில்கூட இவ்வளவு விரிவாக இது பற்றி செய்திகள் வரவில்லை. சீன வானொலி கேட்டதினால்தான் இந்த பெருமை மிகு செய்தியை அறிய முடிந்தது. தொகுத்து வழங்கிய ந.கடிகாசலம் அவர்களுக்கும் வழங்கிய சீன வானொலிக்கும் நன்றிகள்... பாராட்டுக்கள்.


……திருச்சி அண்ணா நகர் வீட்டிஆர்……
சீனாவின் அரச மாளிகையிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை வாங்கி, லாப நோக்கோடு பிரான்ஸின் கிரிஸ்டி நிறுவனம் சீன அரசின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் ஏலம் விட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை மீறி நடந்ததோடு, ஒட்டுமொத்த சீன மக்களின் மனதையும் கிரிஸ்டி நிறுவனம் காயப்படுத்தியுள்ளது. திருட்டுப் பொருளை வாங்குவதற்கும் சில ஆட்கள் இருக்கின்றனர். அவர்களை வைத்து, கிரிஸ்டி நிறுவனம் தங்கள் பிழைப்பை நடத்துகிறது. சில தரப்பினர் இப்படித்தான் தங்கள் வயிற்றை வளர்த்து வருகின்றனர். சீனாவின் இந்த இரண்டு பொருட்களும் சீனாவிலிருந்து களவாடப்பட்டவை. அதனை வாங்கி ஏலம் விட்டவர்களும் ஒரு வகையில் திருட்டுக் குற்றத்திற்கு உட்பட்டவர்களேயாவர்.
ஊட்டி, எஸ். நித்தியா
25 ஆம் நாள் ஒலிபரப்பாகிய இன்றைய திபெத் எனும் நிகழ்ச்சியைக் கேட்டேன். இந் நிகழ்ச்சியில் கடந்த 30 ஆண்டுகளில் திபெத் நல்வாழ்வு இலட்சியம் இடைவிடாமல் வளர்ந்து வருவதைப் பற்றியும், தற்போது திபெத்தில் 7127 மருத்துவச் சிகிச்சை நிறுவனங்கள் உருவாகி திபெத்திலுள்ள ஆயர்கள், விவசாயிகள் ஆகியோர் இலவச மருத்துவ சிகிச்சைகளைப் பற்று பயன் பெருவதை பற்றியும் கேட்டு அறிந்து கொண்டேன். சீனாவின் நாளைய திபெத் தாய் நாட்டின் அரவவைப்பால் மேலும் அதிக முன்னேற்றம் கொண்டு விளங்க எனது வாழ்த்துக்கள்.