அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு வரும் சீனத் தேசிய மக்கள் பேரவையின் திபெத் பிரதிநிதிக் குழு, 17ம் நாள், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையின் அமெரிக்க-சீனப் பணிக் குழுவின் தலைவர்களான Mark Steven Krik மற்றும் Rick Larsonஐயும், பிரதிநிதிகள் அவையின் நீதி சட்ட ஆணையத்தின் தலைவர் John Conyersஐயும் சந்தித்துரையாடியது.
தற்போது சீரான சீன-அமெரிக்க உறவு, சீன நாடாளுமன்றத்திற்கும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு உறுதியான அடிப்படையிட்டுள்ளது. இரு தரப்பினரும் மேலும் நேர்மையான முறையில் கருத்துக்களை பரிமாற்றம் செய்து, பரஸ்பர நம்பிக்கையை அதிகரித்து, பல்வேறு துறைகளிலான பயனுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று திபெத் பிரதிநிதிக் குழுவின் தலைவர் Shingtsa Tenzinchodrak தெரிவித்தார்.
சீனா மீதான அமெரிக்க நாடாளுமன்றத்தின் புரிந்துணர்வை அதிகரிக்க அமெரிக்க-சீனப் பணிக் குழு தொடர்ந்து பாடுபட்டு, இரு நாட்டு உறவின் வளர்ச்சியை முன்னேற்றும் என்று Mark Steven Krik மற்றும் Rick Larson தெரிவித்தனர்.
|