• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-18 10:28:52    
உவமைகள்

cri
முன்பொரு காலத்தில் ஹுய் சு என்பவர் வாழ்ந்து வந்தார். அரசவையில் முக்கிய பதவியில் இருந்த அவர் பேசும்போது பொதுவாக உவமைகளை அதிகம் பயன்படுத்துபவர். எதைச் சொன்னாலும் அழகான ஒரு உவமையோடு சொல்லும் வழக்கம் அவரிடமுண்டு. ஒரு நாள் இளவரசர் லியாங்கிடம் ஒரு நபர் இதை பற்றி முறையிட்டார்.
இளவரசே ஹுய் சு எப்போது பார்த்தாலும் உவமைகளை பயன்படுத்தியே பேசுகிறார். அவரை உவமைகள் ஏதுமின்றி பேசும்படி அவரை நீங்கள் பணித்தீர்களேயானால், அவரால் எதையும் தெளிவாக சொல்லமுடியாது என்றார் அந்த நபர். இளவரசனும் அந்த நபர் சொன்னதை ஆமோதித்து அவர் சொன்னபடி ஹுய் சுவை உவமைகள் ஏதுமின்றி பேசவைக்க இணங்கினான்.
அடுத்த நாள் ஹுய் சுவை பார்த்த இளவரசர் லியாங், இது முதல், தயவு செய்து நீங்கள் நேரடியாக சொல்லவேண்டியதை சொல்லுங்கள், உவமைகள் வழியே எதையும் நீங்கள் சொல்லவேண்டாம் என்று கூறினார்.
இதை கேட்ட ஹுய் சு பொறுமையுடன், இளவரசே, ஒருவேளை உண்டிவில்லை அறியாத ஒரு நபர் இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவனிடம் உண்டிவில் என்றால் அது எப்படி இருக்கும் என்று கேட்பான். அவனிடம் நீங்கள், அது பார்க்க உண்டிவில் போல இருக்கும் என்று சொன்னால், அவன் நீங்கள் சொன்னதை புரிந்துகொள்வானா? என்று கேட்டான்.
அதற்கு இளவரசன், நிச்சயமாக அவனுக்கு புரியாது, புரிந்துகொள்ளமாட்டான் என்றான்.
ஆனால், ஒருவேளை நீங்கள் உண்டிவில் பார்க்க கிட்டத்தட்ட ஒரு வில் போல, கவட்டை வடிவத்தில் மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும் என்று சொன்னால், அவன் புரிந்துகொள்ளமாட்டானா? என்று கேட்டான் ஹுய் சு.
இளவர்சன், ஆமாம் அது கொஞ்சம் தெளிவாகத்தான் இருக்கும் என்ரான்.
ஒருவருக்கு தெரியாததை பற்றி அவருக்கு புரிய வைக்க, அவருக்கு தெரிந்த ஒன்றை வைத்துத்தானே நாம் ஒப்பிட்டு விளக்க முடியும். ஆக நீங்கள் என்னை உவமைகளை பயன்படுத்தக்குடாது என்றால் எப்படி உங்களுக்கு என்னால் புரியாதவற்றை புரியவைக்க முடியும் என்று கேட்டான்.
இளவரசன் ஹுய் சுவின் விளக்கத்தில் அடங்கிய உண்மையை உணர்ந்தான், ஹுய் சொன்னதை ஏற்றுக்கொண்டான்.