இவ்வாண்டின் முதல் 2 திங்கள் காலத்தில், சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்துக்கு வருகை தந்த சீன மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20 ஆயிரத்தை தாண்டியது. மொத்த சுற்றுலா வருமானம் 9 கோடியே 90 இலட்சம் யுவானை எட்டியது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலா அலுவலகத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.

2006ம் ஆண்டு ஜூலை முதல் நாள், சின் காய்-திபெத் இருப்புப் பாதை திறந்து வைக்கப்பட்ட பின், லாசா உள்ளிட்ட திபெத் தன்னாட்சிப் பிரதேசம் மாபெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. திபெத்தின் சுற்றுலாத் துறை அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளது.
|