
1997ம் ஆண்டு, ஹெலான் மலையின் கற்சுவர் ஓவியங்கள், யுனேஸ்கோவினால், அதிகாரப்பூர்வமற்ற உலக பண்பாட்டு மரபு செல்வ பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டன. 2008ம் ஆண்டின் செப்டெம்பர் திங்களில், ஹெலான் மலையின் கற்சுவர் ஓவியங்கள் பற்றிய அருங்காட்சியகம் திறந்து, அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டுள்ளது.

நேயர்களே, யீன் சுவான் நகரம், பல இரகசியங்களை தன்னகத்தே கொண்டு, ஆர்வர் ஈர்ப்பு ஆற்றல் மிக்க இடமாகும். அதற்கு வடப்பகுதியில், புகழ்பெற்ற இரண்டு பண்டைகால கோட்டைச் சிதிலங்கள் உள்ளன. அவை, மிங் மற்றும் சிங் வம்ச காலங்களில், முக்கியமான இராணுவ இடங்களாகும். இப்போது, சீனாவில் மிகவும் புகழ்பெற்ற சென்பெய்பாவ் ஹுவா சியா மேற்கு பகுதி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நகரமாக மாறியுள்ளன.

|