• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-19 09:52:53    
மூ மலை பள்ளத்தாக்கு அருங்காட்சியகம்

cri

மூ மலை பள்ளத்தாக்கு பிரதேசம், யாங்சி ஆற்றுப்பள்ளத்தாக்கின் முக்கிய பகுதியாகும். இன்றைய நிகழ்ச்சியில், சொங்ச்சிங் மாநகரத்திலுள்ள மூ மலை பள்ளத்தாக்கு அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு, இந்த மாநகரம் மற்றும் மூ மலை பள்ளத்தாக்கின் வரலாற்றுப் பண்பாட்டையும் மனித நாகரிகத்தையும் அறிந்துகொள்வோம்.

மூ மலை பள்ளத்தாக்கு அருங்காட்சியகம், 2005ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்டது. காட்சி அரங்குகளின் மொத்த பரப்பளவு, சுமார் 23 ஆயிரம் சதுர மீட்டராகும். அதன் முக்கிய கட்டிட வேலைப்பாடு, மூ மலை பள்ளத்தாக்கு அணைக்கட்டின் வடிவமைப்புடன் தொடர்புடையது.
தற்போது, இந்த அருங்காட்சியகத்தின் நான்கு காட்சி அரங்குகளில், ஒரு லட்சத்து 70 ஆயிரத்துக்கு மேலான தொல்பொருட்கள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. வெவ்வேறான கோணத்திலிருந்து யாங்சி ஆற்றின் மூ மலை பள்ளத்தாக்கு பிரதேசம் மற்றும் சொங்சிங் மாநகரத்தின் வரலாறு, வளர்ச்சி ஆகியவை, இவற்றின் மூலம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன என்று இவ்வருங்காட்சியகத்தின் துணைத் தலைவர் லியு சுன்மிங் அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:

கம்பீரமான அழகான மூ மலை பள்ளத்தாக்கு, நீண்டகால வரலாறு, சொங்சிங் மாநகரின் வளர்ச்சி, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்ட நாட்கள் ஆகிய நான்கு காட்சி அரங்குகள் அருங்காட்சியகத்தில் உள்ளன. யாங்சி ஆற்று மூ மலை பள்ளத்தாக்கின் இயற்கைக் காட்சிகள், மூ மலை பள்ளத்தாக்கு திட்டப்பணியின் அடிப்படை நிலைமை, இப்பிரதேசத்தின் பண்டைக்காலம் மற்றும் வளர்ச்சி முதலியவற்றை பார்வையாளர்கள் அங்கே பார்வையிடுவதன் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
மூ மலை பள்ளத்தாக்கு, சீனத் தேசிய இன நாகரிகம் மற்றும் வரலாற்றின் ஊடுவழியாகவும், சீனாவின் தென்மேற்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் தொடர்பு உருவான இடைவழியாகவும் உள்ளது.

கம்பீரமான அழகான மூ மலை பள்ளத்தாக்கு என்ற தலைப்பிலான முதலாவது காட்சி அரங்கில், யாங்சி ஆற்றின் சுருக்கப்படைப்பு குறைபாடற்ற முறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மூ மலை பள்ளத்தாக்குத் திட்டப்பணி நீரை சேமித்ததால் ஆற்றுப் படுக்கையில் மூழ்கிய தனிச்சிறப்பான தொல்பொருட்கள் இதில் காணப்படலாம். சொங்ச்சிங் மாநகரின் மூ மலை பள்ளத்தாக்கு தொல் பொருள் பாதுகாப்பு ஆய்வுக் குழுத் தலைவர் வாங் சுவான் பிங் கூறியதாவது:
இக்காட்சியறையிலுள்ளவற்றை பார்ப்பதன் மூலம், மூ மலை பள்ளத்தாக்கின் இயற்கைச் சுற்றுச்சூழல், அதன் உருவாக்கம், மனித குலத்துக்கும் இயற்கைக்குமிடையிலான சிறப்புறவு முதலியவற்றை அறியலாம். அவை, அரிதானவை என்றார் அவர்.