• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-19 16:49:52    
முக்கிய தேர்வு முறை

cri

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் துணைத் தலைவரும் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் அரசியல் கலந்தாயவு மாநாட்டின் தலைவருமான பாப்பாலா கிலிக் நம்சியாயின் பெயரிட்ட கட்டுரை 20ம் நாள் வெளியிடப்படும் மக்கள் நாளேட்டில் காணப்படும். ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்வது திபெத் சமூகத்தில் மாபெரும் முன்னேற்றத்தை நனவாக்குவதற்கான முக்கிய தேர்வாகும் என்று கட்டுரை சுட்டிக்காட்டுகின்றது.


ஜனநாயகச் சீர்திருத்தம் குறிப்பாக வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின் திபெத் சமூக மற்றும் பொருளாதாரம் மாபெரும் சாதனைகளை பெற்றுள்ளது. மின்னாற்றல், தாது அகழ்வுத் துறை, கட்டிட மூலப் பொருட்கள், மருந்து தயாரிப்பு முதலிய துறைகள் இப்போது திபெத்தில் உள்ளன. நெடுஞ்சாலை, இருப்புப் பாதை, விமானத் துறை, குழாய் வசிதிகள் ஆகியவை இணைந்த போக்குவரத்து வலைப்பின்னல் திபெத்தில் உருவாகியுள்ளது. குறிப்பாக சிங்காய்-திபெத் இருப்புப் பாதை போக்குவரத்துக்கு திறந்த பின் திபெத்தில் இருப்புப் பாதை இல்லாத வரலாறு முடிவடைந்தது. திபெத் மக்களின் வாழ்க்கை நிலை பெருமளவில் சீரடைந்துள்ளது. கல்வி, அறிவியல், பண்பாடு, சுகாதாரம் ஆகிய துறைகளும் விரைவாக வளர்ந்துள்ளன. தேசிய ஒற்றுமை லட்சியமும் முன்னேற்றமடைந்துள்ளது என்று கட்டுரையில் பாப்பாலா கிலிக் நம்சியாயின் விவரிக்கிறார்.