சீனா நடத்துகின்ற 2010ம் ஆண்டு ஷாங்காய் உலக பொருட்காட்சியில் இடம்பெறும் தென்கொரிய காட்சியகத்தின் வடிவமைப்புத் திட்டம் 19ம் நாள் ஷாங்காய் மாநகரில் வெளியிடப்பட்டது. சர்வதேச நிதி நெருக்கடியால், தென்கொரியாவின் நாணய மதிப்பு சரிந்த போதிலும், இப்பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் அளவை குறைக்காது என்று தென்கொரிய தரப்பு தெரிவித்தது.
தென்கொரிய காட்சியகத்தின் நிலப்பரப்பு 6000 சதுரமீட்டராகும். வெளிநாடுகளில் நடைபெற்ற பொருட்காட்சிகளில் தென்கொரியாவின் காட்சியகங்களில், மிக பெரியது இதுவாகும்.
இப்பொருட்காட்சியில் கலந்துகொள்ள, 2 கோடியே 16 இலட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டாலரை தென்கொரியா திரட்டியது.
|