Mi zhi விழா
இது, ஒரு ஆதிகால வழிபாட்டு விழாவாகும். இது, யுன்னான் மற்றும் குய்சோ மாநிலத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றாகும். ஒவ்வொரு குளிர்காலத்தில், பழகுடியின் மிக மதிக்கபப்ட்ட முதயவர் ஒருவர், மங்கள நாளை தெரிவு செய்து முடிவெடுக்கிறார். இது, ஆண்களின் விழாவாகும். மகளிர், இவ்விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட கூடாது. விழாவின் போது, ஆண்டகள் ஆடுகளை மலையில் குண்டு சென்று சிறப்பு வழிபாட்டு இடத்தில் கொண்டாடுகின்றனர். சிறந்த அறுவடை மற்றும் கால்நடைகளின் வளர்ச்சி பெறுவதை அவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

Qiao nian விழா
யுங் ரென் எனும் மாவட்டத்திலுள்ள மலைகளில், யீ இனத்தின் கிராமங்கள் இடம்பெறுகின்றன. ஆண்டுதோறும் சீன சந்திர நாட்காட்டியின்படி, 4ம் திங்களில், அங்குள்ள யீ இன மக்கள் பிரமாண்டமான கொண்டாட்ட நடவடிக்கைகளை நடத்துகின்றனர்.
அந்நாளின் விடியாற்காலையில், கிராமத்தில் மிக மதிக்கப்பட்ட முதியவர், ஒரு மேளதாள ஒலியை எழுத்து, Qiao nian விழாவின் துவக்கத்தை அறிவிக்கிறார். இப்போது, புதிய ஆடைகளை அணிக்கின்ற மக்கள், கொண்டாட்ட இடத்தில் கூடி நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். உணவுப்பொருட்களை ஆயத்தப்படுத்துவது, மகளிர்களின் முக்கிய கடமையாகும். சோ என்ற சீன தானிய பயிரை விதைவசு, ஆண்களின் முக்கிய பணியாகும்.

இந்த விழா, பொதுவாக ஒரு வேளாண்மை விழாவாகும். இது, யீ இன மக்களின் இயற்கை மீதான வழிபாட்டை வெளிப்படுத்துகிறது. இது, வேளாண்துறையில் ஈடுபடுகின்ற தேசிய இனத்தின் அறுவடையை எதிர்பார்க்கின்ற விருப்பத்தை வெளிப்படுத்துகிறது.

Qiaocai விழா
சி ச்சோ மாவட்டத்தில் வாழ்கின்ற யீ இனத்தின் ஹூவா குவோ பிரிவு மக்கள், இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். இவ்விழா, இந்த 110 குடும்பங்களின் 490 மக்களுக்குரிய தனி சிறப்பு வாயந்த விழாவாகும். இது, அவர்களைப் பொருத்தவரை, வசந்த விழா போல் முக்கியமாக உள்ளது.
|