தற்போது சின்காய்-திபெத் இருப்புப்பாதையோரப் பிரதேசத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சிநிங் முதல் கல்மு வரையான பகுதியில், சின்காய்-திபெத் இருப்புப்பாதை கூட்டு நிறுவனமும் உள்ளூர் அரசும் மரம் நடும் திட்டப்பணியை மேற்கொண்டு வருகின்றன. இருப்புப்பாதையின் திபெத்திலுள்ள பகுதியில், புல்வெளி வளர்க்கப்பட்டு வருகின்றது என்று இந்தக் கூட்டு நிறுவனத்தின் தலைவர் லூ யுங் சுங் தெரிவித்தார்.
சின்காய்-திபெத் இருப்புப் பாதை போக்குவரத்துக்கு வந்த கடந்த 2 ஆண்டுகளில், இருப்புப்பாதை மற்றும் தொடர் வண்டிகளின் வெளியேற்றக் கழிவுப்பொருட்கள் கண்டிப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளையில், நீண்ட கால சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்புமுறையும் கடைபிடிக்கப்பட்டுள்ளது.
|