சீனாவின் வென்ச்சுவான் நிலநடுக்கத்தின் மீட்சி மற்றும் புனரமைப்புக்கான திட்டப்பணியில் வழங்கும், உலக வங்கி, 20ம் நாள் பெய்ஜிங்கில் கையொப்பமிட்டது. இத்திட்டப்பணிக்கு உலக வங்கி 70 கோடிக்கு மேலான அமெரிக்க டாலர் கடனை வழங்கும். சீன அரசு வகுத்த புனரமைப்பு பொது வரையறைக்கு இத்திட்டப்பணி ஆதரவு அளிக்கும்.
சீ ச்சுவான் மற்றும் கான் சூ மாநிலங்களில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள நெடுஞ்சாலை, பாலம், நீர் விநியோகம், மருத்துவ சுகாதார வசதி, கல்வி வசதி ஆகிய துறைகளில் இத்திட்டப்பணிக்கு வழங்கப்படும் கடன் தொகை பயன்படுத்தப்படும்.
உலக வங்கி கடன் அளித்த மிக பெரிய திட்டப்பணி, இதுவாகும் என்று உலக வங்கியின் துணைத் தலைவர் ஜேம்ஸ் ஆடம்ஸ் தெரிவித்தார்.
|