• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-20 15:42:18    
உலக பூப்பந்தாட்ட கூட்டமைப்பின் தரவரிசை

cri

உலக பூப்பந்தாட்ட கூட்டமைப்பு 19ம் நாள் பல்வேறு நாடுகளின் வீரர்களின் புதிய உலக தரவரிசையை வெளியிட்டுள்ளது. ஆடவர் பிரிவு தரவரிசையில் மலேசிய வீரர் Lee Chong Wei தொடர்ந்து முதலிடத்தைப் பெற்றார். மகளிர் பிரிவு தரவரிசையில் டென்மார்க் வீராங்கனை Time Rasmussen தொடர்ந்து முதலிடத்தைப் பெற்றார்.

2014ம் ஆண்டு ஆடவர் கூடைப்பந்து உலக சாம்பியன் போட்டியின் ஏற்பாட்டுரிமையை விண்ணப்பித்த சீனா, ஸ்பெயின், இத்தாலியா ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டி இறுதி கட்டத்தில் நுழைந்துள்ளது. உலக கூடைபந்தாட்ட கூட்டமைப்புயின் மதிப்பீட்டுக் குழு 19ம் நாள் சீனாவின் பெய்சிங்கிலான 3 நாள் சோதனைப் பயணத்தை முடித்தது. தவிர, பெய்சிங்கின் அடிப்படையில், சின் தாவ், சிங் யாங், ஹாங் சோ, சூ சோ ஆகிய 4 நகரங்களை சீனா அதிகரித்து, 2014ம் ஆண்டு ஆடவர் கூடைப்பந்து உலக சாம்பியன் போட்டியை கூட்டாக நடத்தும்.

அடுத்தபடியாக, ஸ்பெயின் மற்றும் இத்தாலியா மீது உலக கூடைபந்தாட்ட கூட்டமைப்புயின் மதிப்பீட்டுக் குழு சோதனைப் பயணம் மேற்கொள்ளும். உலக கூடைபந்தாட்ட கூட்டமைப்புக்கு மூன்று நாடுகளின் தொடர்புடைய நிலைமையை இது வழங்கும். 2014ம் ஆண்டு ஆடவர் கூடைப்பந்து உலக சாம்பியன் போட்டியை நடத்தும் உரிமையைப் பெறும் நாடாக உலக கூடைபந்தாட்ட கூட்டமைப்பு மே 23ம் நாள் அறிவிக்கும்.

பிரான்ஸ் ஒலிம்பிக் அமைப்பு குழு 19ம் நாள் பாரிஸில் கூட்டம் நடத்தியது. பிரான்ஸின் சார்பில் Annecy நகரம் 2018ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையை விண்ணப்பிக்க பிரான்ஸ் முடிவு செய்தது. திட்டப்படி, இவ்வாண்டு அக்டோபர் திங்களுக்கு முன், சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு குழுவிடம் Annecy நகரின் தொடர்புடைய விண்ணப்ப தகவல்களை பிரன்ஸ் ஒலிம்பிக் அமைப்பு குழு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கும். இந்த போட்டியை நடத்தும் உரிமையை விண்ணப்பிக்கும் நகரங்களை சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு குழு தேர்ந்தெடுத்து, 2011ம் ஆண்டு ஜூலை திங்கள், தென் ஆப்பிரிக்காவின் தூ பாங் நகரில் 2018ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் உரிமையை பெறும் நகரை வெளியிடும்.