சீனத் தேசிய மக்கள் பேரவை திபெத் பிரதிநிதிக் குழு 20ம் நாள் கனடாவின் Toronto நகரில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. சர்வதேச நிதி நெருக்கடி திபெத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று இக்குழுவின் தலைவரும் திபெத் மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவர் Shingtsa Tenzinchodrak கூறினார்.
ஏனென்றால், நடுவண் அரசும் திபெத்துக்கு அதிக ஒதுக்கீட்டையும் உதவியையும் வழங்கியுள்ளது என்று செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த போது அவர் தெரிவித்தார். தலாய் லாமா முன்வைத்த பெரிய திபெத் பிரதேசம் என்பது பற்றி குறிப்பிடுகையில், திபெத் சீன உரிமை பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட முடியாத பிரதேசமாகும் என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இதர தேசிய இனங்கள் பெரிய திபெத் பிரதேசத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், உரிமை பிரதேசத்தைப் பாதுகாக்கும் விடுதலை படை திபெத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் தலாய் லாமா கோரினார். அவை எல்லாம் ஒரு நாட்டின் அரசுரிமையுடன் தொடர்புடையவை, ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்று Shingtsa Tenzinchodrak கூறினார்.
|