• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-23 14:23:48    
பதிப்புரிமை வர்த்தகத்துக்கான வடிவம்

cri

அண்மையில், சர்வதேச பதிப்புரிமை வர்த்தக மையம் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது. சீனாவின் பதிப்புரிமை வர்த்தகத்தை முறைபடுத்தும் நடவடிக்கையாக இது அமைகிறது. இதன் மூலம், பல்வேறு படைப்புகளின் பதிப்புரிமைப் பாதுகாப்பு, வர்த்தகம், பயன்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் என்று சீனத் தேசிய பதிப்புரிமை ஆணையத்தின் துணைத் தலைவர் யாங் சிய குங் தெரிவித்தார்.


1990ம் ஆண்டு, பதிப்புரிமை பற்றிய சீனாவின் முதலாவது சட்டம் வெளியிடப்பட்டது. 1992ம் ஆண்டு, பொல்நி பொது ஒப்பந்தம், உலக பொது பதிப்புரிமை ஒப்பந்தம் ஆகியவற்றில் சீனா சேர்ந்தது. அப்போது, உலக பதிப்புரிமைச் சந்தையுடன் சீனா இணையத் துவங்கியது. ஆனால், பதிப்புரிமை என்னும் கண்ணோட்டத்தை, சீன மக்கள் பொதுவாக தெரிந்திருக்கவில்லை.

2001ம் ஆண்டு, உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்ததற்கு பின், பதிப்புரிமை பாதுகாப்புப் பணியில், சீன அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அதேவேளையில், சீன அரசு பதிப்புரிமைத் துறையை முக்கியமாக வளர்த்து வருகிறது. தற்சார்புப் புத்தாக்கம் வாய்ந்த நாடாக மாறும் உத்திநோக்குத் திட்டத்தை சீன அரசு முன்வைத்தது. புத்தாக்கத்தை பாதுகாத்து, பதிப்புரிமையை வளர்ப்பது என்ற கருத்து, மக்களிடையில் மிகவும் பரவலாகிவிட்டது.


சீனாவின் பதிப்புரிமை பாதுகாப்பு மையத்தின் புள்ளிவிபரப்படி, 2008ம் ஆண்டு, சீனாவில் மென்பொருட்களுக்கான பதிவு எண்ணிக்கை, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 90 விழுக்காடு அதிகமாகும். நாட்டின் தொடர்புடைய கொள்கைகளோடு, சீன பதிப்புரிமைத் துறை பெரிதும் வளர்ந்து வருகிறது. சர்வதேச பதிப்புரிமை வர்த்தக மையத்தை உருவாக்குவது இன்றியமையாதது என்று சீனாவின் பதிப்புரிமை பாதுகாப்பு அலுவலகத்தின் தலைவர் துவான் குய் கருத்து தெரிவித்தார்.


நண்பர்களே, பதிப்புரிமை வர்த்தகத்துக்கான வடிவம் என்ற தகவலை அறிந்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.