|
வரலாற்றைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தை எதிர்பார்க்கின்றோம்
cri
|
வரலாற்றைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தை எதிர்பார்க்கின்றோம் என்ற தலைப்பிலான கட்டுரையை சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் துணைத் தலைவர் Ngapoi Ngawang Jigme வெளியிட்டார். திபெத்தை ஒரு தனிநாடாக நிறுவும் கருத்தை தலாய் லாமா கைவிட்டு, நாட்டுப்பற்று பாதைக்கு திரும்ப வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் திபெத் மக்கள் நாட்டின் உரிமையாளர்களாக மாறிவிட்டனர். தாய்நாட்டின் குடும்பத்தில் இருந்த படி தான் திபெத் வளர்ச்சி அடையும், மக்கள் இன்பமாக வாழ முடியும் என்று அவர் கட்டுரையில் கூறினார்.
1910ம் ஆண்டு பிறந்த அவர், பழைய திபெத்தில் உயர் மட்ட கடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தவர். 1951ம் ஆண்டு திபெத் உள்ளூர் அரசின் முதன்மை பிரதிநிதியாக அவர் நடுவண் அரசின் பிரதிநிதியுடன் திபெத்தை அமைதியாக விடுதலை செய்வது பற்றிய உடன்படிக்கையில் கையொப்பமிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|