இலட்சக்கணக்கான திபெத் பண்ணை அடிமைகள் விடுதலை பெற்ற முதலாவது நினைவு நாளை முன்னிட்டு, சீன வானொலி நிலையத்தின் செய்தியாளர்கள் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்துக்குச் சென்றனர். திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 50 ஆண்டுகளில், அரசியல், பொருளாதாரம், பண்பாடு, மக்கள் வாழ்க்கை, சமூக வளர்ச்சி முதலிய துறைகளில் திபெத் தன்னாட்சிப் பிரதேசம் பெற்றுள்ள புதிய வளர்ச்சிகள் மற்றும் மாற்றங்கள் குறித்து, செய்தியாளர்கள் பன்முகங்களிலும் அறிவித்தனர்.
லாசா நகரில் வாழ்கின்ற Nyima Tsering என்றும் முதியவருக்கு இவ்வாண்டு வயது 76 ஆகிறது. திபெத்தின் பழைய சமூகத்தை விட, தற்போதைய வாழ்க்கையை அவர் மிகவும் பேணிமதிக்கின்றார். திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தத்திற்கு முன் பழைய சமூகத்தில், Nyima Tsering பண்ணை அடிமைச் சொந்தகாரர்களுக்கு அடிமையாக பல சேவைகளை செய்து கொண்டிருக்கின்றார். இது குறித்து அவர் கூறியதாவது:
இளமைக்காலத்தின் போது, எனது வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றில், மிகவும் இன்னலான நிலை. ஏன், மூன்று வேளை சாப்பிடுவது கூட குறைவே. ஒரு சில நாட்களில், ஓரே வேளை தான், உணவு கிடைக்கும். ஆண்டின் 4 பருவக்காலங்களில், ஓரே ஒரு பழைய சட்டையை அணிந்திருக்கும் நிலை. காலணி இருக்கவில்லை. குளிர்காலத்தை மிகவும் கடினமாக கழித்தேன். பண்ணை அடிமைச் சொந்தக்காரரின் அடக்கு முறையில் வாழ்ந்த நிலைமையில், கடினமான வாழ்க்கையை தவிர, அடிமைகளுக்கு வேறு எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
1959ம் ஆண்டு, திபெத்தில் நிகழ்ந்த கலகத்தை அமைதிப்படுத்திய பின், பண்ணை அடிமைகளை விடுதலை செய்து, அவர்களுக்கும் பண்ணை அடிமைச் சொந்தகாரர்களுக்கும் இடையிலான ஆண்டான் அடிமை உறவை நீக்குவதாக சீன நடுவண் அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, பண்ணை அடிமைகளின் உயிர் பாதுகாப்பும் தனிநபர் சுதந்திரமும், நவ சீனாவின் அரசியல் அமைப்புச் சட்டத்திலும் இதர சட்டங்களிலும் உத்தரவாதத்தை பெறுகின்றன. அத்துடன், நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமைச் சொந்தகாரர்கள் அனுபவித்த நில உடைமை முறையும் நீக்கப்பட்டது.
ஜனநாயக மற்றும் சீர்திருத்தம் மூலம், திபெத்தின் அரசியலை மதத்துடன் இணைத்த அமைப்பு முறை நீக்கப்பட்டது. இதற்கு பின், தேசிய இனப் பிரதேசத்தின் தன்னாட்சி அமைப்பு முறையை நடுவண் அரசு திபெத்தில் படிப்படியாக நடைமுறைப்படுத்தியது. 1961ம் ஆண்டு முதல், திபெத்தில், பொதுத் தேர்தல் நடைபெற துவங்கியது. முந்தைய பண்ணை அடிமைகள், நாட்டின் உரிமையாளர் என்பதை பிரதிநிதித்துவப்படுத்தும் வாக்களிப்பு உரிமையை முதன்முறையாக பெற்றனர். பொதுத் தேர்தலின் மூலம், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பல்வேறு நிலை அரசுகளும் வாரியங்களும் உருவாக்கப்பட்டன.
1965ம் ஆண்டு செப்டம்பர் திங்கள், முதலாவது திபெத் மக்கள் பேரவையின் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசு அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. தேசிய இனப் பிரதேச தன்னாட்சி என்ற அமைப்பு முறை திபெத்தில் உருவானதை இது குறிக்கின்றது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் பேரவை நிரந்தர குழுவின் துணைத் தலைவர் A teng கூறியதாவது:
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் முதலாவது மக்கள் பேரவையின் கூட்டம் நடைபெற்றது. இது, தேசிய இனப் பிரதேசதன்னாட்சி என்ற அமைப்பு முறை திபெத்தில் செயல்படுத்தப்பட்டதன் அடையாளமாகும். தேர்தலின் மூலம், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் கமிட்டி இக்கூட்டத்தில் உருவாக்கப்பட்டது என்றார் அவர்.
தேசிய இனப் பிரதேச தன்னாட்சி என்ற அமைப்பு முறை திபெத்தில் நடைமுறைப்படுத்தியது என்பது, திபெத் இன மக்கள் அரசு விவகாரங்களை விவாதித்து அதில் பங்கு கொள்ளும் உரிமையை உத்தரவாதம் செய்கின்றது. தற்போது, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பல்வேறு நிலைகளிலிருந்து வந்த 34ஆயிரத்துக்கு அதிகமான பிரதிநிதிகளில், திபெத் இனம் மற்றும் இதர சிறுபான்மை தேசிய இனங்களின் பிரதிநிதிகள் 94விழுக்காட்டுக்கு மேல் வகிக்கின்றனர். திபெத்தின் தன்னாட்சிப் பிரதேசத்தின் பல்வேறு நிலை அரசுகள் மற்றும் மக்கள் பேரவையின் அதிகாரிகளுக்கான பதவிகளில், திபெத் இன மற்றும் இதர சிறுபான்மை தேசிய இன மக்கள் பலர் உள்ளனர்.
ஆண்டுதோறும் நடைபெற்ற திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் பேரவைக் கூட்டங்களின் போது, திபெத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக ஆக்கப்பணி முதலியவை குறித்து, பல்வேறு நிலை மக்கள் பேரவைப் பிரதிநிதிகள் 10ஆயிரத்துக்கு அதிகமான ஆலோசனைகளை முன்வைக்கின்றனர். திபெத் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை தூண்டும் முக்கிய ஆற்றலாக அவர்கள் மாறியுள்ளனர்.
|