பிரிட்டனில் பயணம் மேற்கொண்டுள்ள சீனத் திபெத் பிரதிநிதிக் குழு, 23ம் நாள் பிற்பகல், அங்கு கல்வி பயிலும், சீன மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தியது.
பிரதிநிதிக் குழுவின் பொறுப்பாளரும், சீனத் திபெத்தியல் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளருமான Zhang Yun, அண்மையில் சீன அரசு திபெத்தின் ஜனநாயகச் சீர்திருத்தத்தின் பொன்விழா என்னும் வெள்ளையறிக்கையை வெளியிட்ட பின்னணி பற்றியும், திபெத் பண்ணை அடிமைகளின் விடுதலை நாளை நிறுவுவதன் முக்கியத்துவம் பற்றியும் அறிமுகப்படுத்தினார். அதே வேளையில் மேலை நாடுகள் அடிமை அமைப்பு முறையை நீக்கிய நடவடிக்கைகளுடனும் அதனை ஒப்பிட்டார் தலாய் லாமாவால் கூறப்படும் உயர்ந்த தன்னாட்சியின் உண்மையான இயல்பு, திபெத் மற்றும் உள்பிரதேசங்களின் வளர்ச்சிக்கு இடையில் வேறுபாடுகள் நிலவுகின்ற அடிப்படைக் காரணங்கள் ஆகியவை பற்றி, பிரதிநிதிக் குழுவின் திபெத்தியல் அறிஞர் Zhaluoஉம், Dejizhuoma அம்மையாரும் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
இப்பிரதிநிதிக் குழுவினர் 22ம் நாள் இலண்டன் சென்றடைந்தனர். பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம், The Guardian செய்தி நிறுவனம், பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழ் அவை, Cambridge பல்கலைக்கழகம் முதலிய இடங்களுக்குச் சென்று, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள், அறிஞர்கள் மற்றும் திபெத்தியல் அறிஞர்களுடன் பரிமாற்றம் மேற்கொள்வர்.
|