• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-24 10:47:09    
ச்சிங் வம்சக்காலத்திலான யோங்லிங் கல்லறை (அ)

cri

ச்சிங் வம்சக்காலத்திலான யோங்லிங் கல்லறை, சீனாவின் லியாவ்நிங் மாநிலத்தின் ஃபூஷூன் நகரின் சின்பின் மன் இனத் தன்னாட்சி மாவட்டத்தில் உள்ளது. இது 1598ம் ஆண்டு கட்டியமைக்கப்பட்டது. முதலில் இது சிங்ச்சிங்லிங் கல்லறை என அழைக்கப்பட்டது. 1659ம் ஆண்டு தொடக்கம், இது யோங்லிங் கல்லறை என அழைக்கப்படத் துவங்கியது. இது 400க்கு மேலான ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட கல்லறைக் கட்டிடமாகும். ச்சிங் வம்சக்கால பேரரசர் Nuerhachiஇன் 6 மூதாதையர்கள் அங்கு புதைக்கப்பட்டனர்.

ச்சிங் வம்சக்காலத்தின் பேரரசர் Nuerhachi

இது, ஷென்யாங் நகரிலான Zhaoling கல்லறை, ஃபூலிங் கல்லறைகள், ஆகியவற்றோடு சேர்த்து, மூன்று கல்லறைகள் என அழைக்கப்படுகின்றது. யோங்லிங் கல்லறையின் அளவு, இம்மூன்று கல்லறைகளில், முதலிடம் வகிக்கிறது.

                               

ச்சிங் வம்சக்காலத்தின் பேரரசிகளான க்காங்சி, ச்சின்லோங், சியாச்சிங், தாவ்குவாங் ஆகியோர், 9 முறையாக அங்கு சென்று, மூதாதையர்களை வணங்கினர். இதை தொடர்ந்து, யோங்லிங் கல்லறைக்குச் சென்று, மூதாதையர்களை வணங்குவது, ச்சிங் வம்சக்காலத்தில் நாடளவில் பின்தடரப்பட்ட பெரிய நடைமுறையாக மாறியது.