கனடாவில் பயணம் மேற்கொண்டிருக்கின்ற சீனத் தேசிய மக்கள் பேரவையின் திபெத் பிரதிநிதிக் குழுவுடன், கனடா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகளவைத் தலைவர் பீட்டர் மிலிகென் 23ம் நாள், கலந்துரையாடல் நடத்தினார். கடந்த 50 ஆண்டுகளில், திபெத் பல சாதனைகளைப் பெற்றுள்ளதை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
இரு நாட்டுறவுக்கு மிலிகென் முக்கிய பங்காற்றுவதை, திபெத் பிரதிநிதிக் குழுவின் தலைவரும், சீனத் தேசிய மக்கள் பேரவையின் உறுப்பினரும், திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவருமான ஷிங்ச டென்சின் சோராக் வாழும் புத்தர் உயர்வாக மதிப்பிட்டார்.
திபெத் பிரதிநிதிக் குழு, கனடாவில் இந்த பயணம் மேற்கொள்வது இது முதல் முறையாகும். இதன் மூலம், பல்வேறு துறையினர் உண்மையான திபெத்தை புரிந்துகொள்வதற்குத் துணை புரிய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். கனடாவின் துணை வெளியுறவு அமைச்சர், நாடாளுமன்றத்தின் உறுப்பினர் சிலர் முதலியோரை இப்பிரதிநிதிக் குழு சந்தித்துரையாடியது.
|