சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள தொடர்புடைய வாரியங்களின் புள்ளிவிபரங்களின் படி, 2008ம் ஆண்டு, தானிய விளைச்சல், 9 இலட்சத்து 50 ஆயிரம் டனை எட்டியது. மொத்த தானிய விளைச்சல், தொடர்ந்து 9 ஆண்டுகளாக, 9 இலட்சம் டன்னை தாண்டியுள்ளது.
ஜனநாயகச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட 50 ஆண்டுகளாக, நில அமைப்பு முறை மற்றும் உற்பத்தி வழிமுறைகளின் சீர்திருத்தத்தின் மூலம், திபெத் வேளாண்மை உற்பத்தி ஆற்றல், தொடர்ந்து உயர்ந்துள்ளது. தானிய உற்பத்தியில் தெபெத் தன்னிறைவு அடைந்துள்ளது.
1959ம் ஆண்டு முதல், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் நிலச் சீர்திருத்தம் நடைமுறைப்பட்டது. பண்ணை அடிமைச் உரிமையாளரின் ஏறக்குறைய ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ஹெக்டர் நிலங்கள், 8 இலட்சம் அடிமைகளுக்கு வினியோகிக்கப்பட்டன. இந்த நிலச் சீர்திருத்தம், முன்னென்றும் கண்டிராத திபெத் மக்களின் உற்பத்தி மற்றும் வாழ்க்கையின் உற்சாகத்தை தீவிரமாக்கியது. 1960ம் ஆண்டு மட்டுமே, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மொத்த தானிய விளைச்சல், 1959ம் ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 12 விழுக்காடு அதிகமாகும். கால்நடைகளின் எண்ணிக்கை, 10 விழுக்காடு அதிகமானதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
|