
கடந்த நூற்றாண்டின் 80வது ஆண்டுகளில், புகழ்பெற்ற இயக்குநர் சாங் யீ மோ, இங்கு சிவப்பு சோளரம் என்னும் திரைப்படத்தை இயக்கி, பெர்லின் திரைப்பட விழாவில், தங்க கரடி விருது பெற்றதால், இவ்விடம், புகழ் பெற்றது. அதற்குப் பின்பு, புகழ்பெற்ற எழுத்தாளார் சாங் சியென்லியாங், இந்தத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நகரத்தை விவேகத்துடன் திறத்தார். இதுவரை, 60க்கு மேலான திரைப்படங்களும் தொலைக்காட்சி தொடர்ப்புகளும் இங்கு தயாரிக்கப்பட்டன. அவர் கூறியதாவது:

பிற திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நகரங்களை விட, இது மிகவும் அதிக அரங்கங்களை கொண்டது. இங்கு எடுக்கப்படும் ஒவ்வொரு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்ப்புகளும், பண்பாட்டு உள்ளடக்கத்தை இணைத்துக் கொண்டு, பல கதைகளை படப்பிடிப்பு செய்யலாம்.

|