
 21ம் நூற்றாண்டு தொடங்கிய பின், வீடு மற்றும் வீட்டுமனைச் சந்தை பெரிதும் வளர்ச்சியடையத் தொடங்க, அடுக்குமாடி குடியிருப்புகள் பரவலாகிப்போக, மக்களின் தேவையும் அதிகமாயின. காலப்போக்கில், நகரங்களில் வசிக்க வீடு கிடைப்பது கடினம் என்ற நிலைமை ஏற்பட்டது. ஆக இப்போது திருமணம் செய்வதற்கு முன், ந்கரங்களில் வசிக்கும் பெரும்பாலான இளைஞர்கள், பணம் சேமித்து, அடுக்கு மடி குடியிருப்பில் ஒரு வீட்டை வாங்கி தனதாக்கிக் கொள்வதை ஒரு முன்னிபந்தனை கோரிக்கையாக வைத்துள்ளனர். ஆக இன்றைக்குள்ள இளைஞர்கள் திருமணம் செய்வதற்கு ஏகத்துக்கும் யோசிக்கும் சூழல் உருவாகியுள்ளது. வீடும், காரும் அவசியம் என்ற ஒரு சூழலில், தனியே தலையெடுத்து, சொந்தமாக வாழத்தொடங்கும் இளைஞர்கள் மீண்டும் பெற்றோரிடம் உதவிக்கு திரும்புகின்றனர். சீனாவில் பொதுவாக ஆணோ, பெண்ணோ படித்து முடித்து வேலை கிடைத்த பின் சொந்தமாக தாங்களே வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வழிதேடுகின்றனர். இதுவே மிகவும் பரவலாக காணப்படும் வழமை. வளர்ந்து வருமானம் ஈட்டத் தொடங்கிய பின்னும் பெற்றோருக்கு சுமையாக இருக்கக்கூடாது என்ற எண்ணமே இதற்கு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் திருமணங்களுக்கு அவசியம் என்று காலச்சக்கரத்தின் சுழற்சியில் புதிதாக இணைந்துகொண்ட அத்திவாசிய பொருட்களான வீடு, கார் முதலியவற்றை சொந்தமாக வாங்க 20 களில், வாழ்க்கையை தொடங்கிய இளைஞர்கள் அனைவரும் கோடீஸ்வரர்களா என்ன? ஆக மறுபடியும் பெற்றோரிடமே உதவிக்கு நிற்கும் நிலை.
|