• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-24 14:08:13    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிகளை பற்றிய உங்களது கருத்துக்களின் எங்களது தொகுப்பாக வலம் வரும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் மீண்டும் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
க்ளீட்டஸ்: கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் வாயிலாக நிகழ்ச்சிக்களை பற்றிய கருத்துக்களையும், விமர்சனங்களையும் எழுதியனுப்பி வரும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
கலை: இன்றைய நேயர் நேரம் நிகழ்ச்சியில், சீன தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத்தொடர்கள் பற்றிய நேயர் நண்பர்களின் கருத்துக்கள் இடம்பெறுகின்றன.
பாண்டிச்சேரி, N. பாலகுமார்
உலகின் பல்வேறு நாடுகளின் கவனத்தை முழுமையாக ஈர்த்துவருகின்ற 11வது சீன தேசிய மக்கள் பேரவைக் கூட்டத் தொடர் மற்றும் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு ஆகியவை இரண்டும், இப்போது உலகத்தின் பார்வையில் படர்ந்துள்ளது.
சீன மக்கள் தேசிய கலந்தாய்வு மாநாட்டின் போது அளிக்கப்பட்ட அறிக்கையில், மாநாட்டின் உறுப்பினர்க:ள் சுமார் 4700 மேற்பட்ட ஆலோசனைகளை வழங்கி இருப்பதாகவும், அதில் அரசு முன்மொழிவுகளில் சுமார் 90 விழுக்காடு நடைமுறை படுத்தக் கூடியவையாக இருப்பதையும் கேட்டு மன மகிழ்ந்தேன். ஏனெனில் மக்களின் குறையை நேரில் கள ஆய்வுபணி மேற்கொண்டு தயாரித்த முன்மொழிவுகள் அல்லவா... அது நிச்சியம் பயன் அளிக்கக்கூடியதாகவே இருக்கும்.
சீன தலைமை அமைச்சர் திரு.வென் ச்சியா பாவ் அவர்கள், அரசு பணியறிக்கையை வெளியிட்டார். சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 8 விழுக்காட்டாக அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இது, சீன அரசின் கனவை நனவாக்க, இந்த கூட்டத்தொடரின் வாயிலாக அனைத்து சீன மக்களுக்கு அழைப்பு விடுத்தது போல இருந்தது.


......மதுரை-20 ஆர். அமுதாராணி......
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டு ஆண்டு கூட்டம் பெய்ஜிங்கில் தொடக்கி நடைபெற்றது. தற்போதைய உலக நிதிநெருக்கடியின் வளர்ச்சிப் போக்கில் நேரடியாக கவனம் செலுத்தி, பொருளாதார அதிகரிப்பு முன்னேற்ற கொள்கைகளின் உண்மை பயன்களை கண்காணித்து மக்களின் வாழ்க்கையில் எப்பொழுதும் கவனம் செலுத்துவதுதான் இந்த அரசியல் கலந்தாய்வு கூட்டத்தின் நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கூட்டத்தொடரின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.
......வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்......
கடந்த ஓராண்டில், 55 கள ஆய்வுப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட கலந்தாய்வு மாநாட்டின் உறுப்பினர்கள், 4700க்கும் அதிகமான கருத்துருக்களை வழங்கியுள்ளனர். இது அவர்களின் ஆர்வத்தையும், தாய்நாட்டின் மீதான அக்கறையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. உலக நாடுகளில், அதிகாரப் பகிர்வை பெறும் நபர்கள், அகங்காரம் கொள்கின்றனர். ஆனால், சீனாவிலோ, அவர்கள் கட்டுமானச் சிற்பிகளாக மாறிவிடுகின்றனர். இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி, நாட்டு நலன் மீது அக்கறை செலுத்தும் 2100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுக்கு என் அன்பான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..
அன்றி, பிரதிநிதிகளில் சிலர் வலைப்பூக்களை உருவாக்கி, தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் என்ற தகவல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. காலத்துடன் இணைந்த செயல்பாடு எப்போதும் மதிப்புமிக்கது. அறிவியல் தொழில்நுட்பத்தை, நாட்டின் வளர்ச்சியுடன் இணைத்து செயல்படும் பிரதிநிதிகளை பாராட்டுகின்றேன்.
……திருச்சி அண்ணா நகர் வீட்டிஆர்……
நமது எண்ணம் நன்றாக இருந்தால், செய்யும் செயல் நன்றாக இருக்கும். நமது செயல் நன்றாக இருக்கும்போது, நமது பணி சிறப்பாக இருக்கும். அதில் ஒரு உயர்வும் இருக்கும். அதுபோன்றுதான் உயரிய எண்ணங்களுடன் சீன மக்கள் குடியரசு சுதந்திரத்திற்குப் பின் தன்னை செயல்படுத்தி வருகிறது.
பல ஜனநாயக நாடுகளில் வாக்குகளை சேகரிக்க மக்களிடம் வருவதோடு சரி. அவர்களின் பிரச்னையைத் கேட்கவோ தீர்க்கவோ மீண்டும் செல்வது கிடையாது. ஆனால் கம்யூனிஸ பொதுவுடமை ஆட்சி கொண்ட சீன மக்கள் குடியரசு தனது பேரவை உறுப்பினர்களை மாநிலம் மாநிலமாக அனுப்பி மக்களை சென்று பாருங்கள் என்று அவர்களின் கடமையை நினைவூட்டி கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டிய மக்களின் கருத்துக்களை ஆராய்ந்து வர அனுப்பியுள்ளது. உறுப்பினர்களின் முக்கியப் பணி என்னவென்பது இங்கே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எடுத்த காரியம் யாவிலும் வெற்றி என்று வாழ்த்துக்கள் கூறி பேரவைத் தலைவருக்கும் மாநாட்டிற்கும் சீன மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.


மதுரை 20, அண்ணாநகர், N. இராமசாமி
சீன வானெலி தமிழ்ப் பிரிவில் இரு கூட்டத்தொடர்களின் நிகழ்ச்சிகளை விடாமல் கேட்டோம். இந்தக் கூட்டதொடரின் நிகழ்ச்சிகளை சீனவானெலி தமிழ்பிரிவு தமிழ் நேயர்களுக்கு எளிய முறையில் தெரிந்துகொள்ளுமாறு ஒலிபரப்பியது. தற்போதைய மிகக் கடுமையான உலக பொருளாதார
நிலைமையில் சீனா பயனுள்ள ஊக்குவித்தல் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு உள்ளது. சர்வதேச ஒத்துழைப்பிலும் சீனா ஆக்கபூர்வமாக பங்கு எடுத்து வருகிறது சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்பை ஆக்கப்பூர்வமாகவும் உரியமுறையிலும் சமாளித்து சீனா உலகிற்கு வழிகாட்டுவதில் பங்கு ஆற்றும் என நம்புகிறோம்.
......பாண்டிச்சேரி ஜி.ராஜகோபால்......
சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது கூட்டத் தொடரை நான் சீன வானொலியின் மூலமாக கேட்டு ரசித்தேன்.
மனித முதன்மை என்னும் மதிப்பை கருத்தில் கொண்டு, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் முக்கிய கடமையை மையமாகவும் மக்களின் நன்மைகளை முக்கியமாகவும் கொண்டு, மக்களின் உண்மையான நிலைமை பற்றிய மேலதிக கருத்துக்களை முன்வைத்து , மக்களுக்கு நலன் தரும் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று திரு. சியா சிங்லின் அவர்கள் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது கூட்டத் தொடரில் குறிப்பிடுள்ள கருத்து ஒரு உண்மையான சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கான கருத்தாகும்.
சிறுநாயக்கன்பட்டி, கே.வேலுச்சாமி
இன்றைய உலகம் பொருளாதார வீழ்ச்சியின் பிடியில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் சீனா மட்டும் அதற்கு விதி விலக்காக பொருளாதார வளர்ச்சியில் சரியான பாதையில் வெற்றிநடை போட்டு சென்று கொண்டிருக்கின்றது. இந்த வேளையில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11-வது தேசிய கமிட்டியின் 2 வது கூட்டத்தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்து அதில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் சீன அரசு மென்மேலும் பல்வேறு துறைகளிலும் நல்ல வளர்ச்சியினை பெற பல கருத்துக்களையும், ஆக்கப்பூர்வமான பல திட்டங்களையும் வழங்கியுள்ளனர். இதன் மூலம் சீனாவின் வருங்காலம் பொற்காலமாக அமையும் என்றால் மிகையாகாது பாராட்டுக்கள்.