• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-24 14:24:57    
இன்னொரு சுவையான சீன உணவு வகை

cri

க்ளீட்டஸ் – நண்பர்களே. இன்றைய நிகழ்ச்சியில் எங்களுடன் இணைந்து இன்னொரு சுவையான சீன உணவு வகையின் தயாரிப்பை அறஇந்து கொள்ளலாம். வாணி – தமிழகம் கடலோர மாநிலமாகும். கடல் நீர் வாழ் இனங்கள் உணவு வகைகளில் இடம்பெறுவது அதிகம்.

க்ளீட்டஸ் – சரி.
வாணி – க்ளீட்டஸ், உங்களுக்கு இறால், நண்டு ஆகியவை பிடிக்குமா?
க்ளீட்டஸ் – பிடிக்கும். பலர் இறாலைச் சாப்பிட விரும்புகின்றனர்.
வாணி -- சரி, இன்றைய நிகழ்ச்சியில் இறால் இடம்பெறும் ஒரு வகை பட்டாணி உணவின் தயாரிப்பு பற்றி கூறுகின்றோம்.
க்ளீட்டஸ் – ஓ. பட்டாணிகளின் வகைகள் அதிகம். இன்றைய பட்டாணியின் தனிச்சிறப்பு என்ன?
வாணி – இறால்களின் பகுதிகள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன.
க்ளீட்டஸ் – அப்படியா? முதலில் தேவைப்படும் பொருட்களை தெரிவிக்கவும்.
வாணி – சரி, கூறுகின்றேன்.
கடல் நீர் இறால் 150 கிராம்
வெங்காய தழை 1
அரிசி 100 கிராம்
இஞ்சி போதிய அளவு
பூண்டு பல் 1
சமையல் மது ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ் 2 தேக்கரண்டிகள்
சர்க்கரை ஒரு தேக்கரண்டி
வெள்ளை மிளகு தூள் 2 கிராம்
நல்லெண்ணெய் 2 தேக்கரண்டிகள்
சமையல் எண்ணெய் 2 தேக்கரண்டிகள்
உப்பு 3 கிராம்
வாணி – முதலில், அரிசி மற்றும் இறால்களை தனித்தனியாக சுத்தம் செய்ய வேண்டும்.
க்ளீட்டஸ் – இறாலின் தோலை நீக்க வேண்டுமா?
வாணி – கண்டிப்பாக. இறால் தோலை நீக்கி, இறால்களின் முதுகிலுள்ள கறுப்பான பொருளை நீக்க வேண்டும். கவனியுங்கள், இறால் தலை மற்றும் தோல் ஆகியவை தேவைப்படும். தூக்கியெறிய வேண்டாம்.
க்ளீட்டஸ் – சரி. பிறகு, வெங்காய தழை, இஞ்சி, பூண்டு பல் ஆகியவற்றை மிக சிறிய அளவில் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
வாணி – வாணலியை அடுப்பின் மீது வைத்து, அதில், சமையல் எண்ணயை ஊற்றவும். நறுக்கப்பட்ட இஞ்சி, பூண்டு, பாதி அளவிலான வெங்காயத் தழை ஆகியவற்றை வாணலியில் போடலாம். சில வினாடிகளுக்குப் பின், இறால் தலை மற்றும் தோலை இதில் போடவும். நன்றாக வதக்கவும். வாணலியிலுள்ள எண்ணெய் மெதுவாக சிவப்பாக மாறுவதை பார்க்கலாம். 

 

க்ளீட்டஸ் – இறால் தலை மற்றும் ஓடுகளை வாணலியிலிருந்து வெளியே எடுத்து, மற்றொரு வாணலியில் கொட்டுங்கள். இந்த வாணலியில் 500 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, உப்பை கொட்டுங்கள். பிறகு, இதனை அடுப்பின் மீது வைத்து, சுமார் 15 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். பிறகு, இறால் தலை மற்றும் ஓடுகளை இதிலிருந்து வெளியே எடுத்து வீசிவிடலாம்.
வாணி – செந்திறமாக மாறிய எண்ணெயைக் கொண்ட வாணலியில் ஏற்கனவே சுத்தம் செய்த அரிசியை கொட்டுங்கள். நன்றாக வதக்கவும். பிறகு, இறால் சூப்பை இதில் ஊற்றலாம். சுமார் ஒரு கோப்பை அரிசிக்கு 1.5 கோப்பை அளவுடைய சூப் தேவைப்படும்.
க்ளீட்டஸ் – இறால்களை, நல்லெண்ணெய், உப்பு, வெள்ளை மிளகு தூள் ஆகியவற்றுடன் நன்றாக கிளறி, 10 நிமிடங்களுக்குப் பின், வாணலியில் கொட்டலாம். பட்டாணியை தயார் செய்யுங்கள்.
வாணி – எஞ்சிய வெங்காயம், சோயா சாஸ், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும். இறால் பட்டாணி தயாரிக்கப்பட்ட பின், அதன் மேல் ஊற்றலாம்.
க்ளீட்டஸ் – நேயர்கள், இன்றைய சுவையான இறால் பட்டாணி உணவு தயார்.
வாணி – இறால் தலை மற்றும் தோலை எண்ணெயில் போட்டு வதக்கிய பிறகு, எண்ணெயின் நிறம் சிவப்பாக மாறிவிடும். இதன் மூலம் தயாரிக்கப்பட்ட பட்டாணியும் சிவப்பாக உள்ளது. இது இன்றைய உணவு வகையின் தனிச்சிறப்பாகும்.
க்ளீட்டஸ் – மேலும், அரிசியை நேரடியாக எண்ணெயில் போட்டு வதப்பதன் மூலம் தயாரிக்கப்பட்ட பட்டாணி, அரிசி வறுவல் விரும்புபவர்களுக்குப் பொருந்தியது. வீட்டில் முதியோர் இருந்தால், அரிசியை முன் கூட்டியே தண்ணீரில் ஒரு மணி நேரம் இருக்கவிடலாம். இப்படி தயாரிக்கப்பட்ட பட்டாணி மேலும் மென்மையாக இருக்கும்.
வாணி – இன்றைய பட்டாணியின் தயாரிப்பு முறை மிகவும் எளிதானது. வீட்டில் தயாரித்து ருசி பாருங்கள்.