• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-24 21:11:19    
தலாய் லாமா குழு

cri

தலாய் லாமா குழு, பழைய திபெத்தின் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்புமுறையுடன் பிரிக்கப்பட முடியாத தொடர்புடையது. சின்குவா செய்தி நிறுவனம் 24ம் நாள் வெளியிட்ட யீதோ பெயரிட்ட கட்டுரை ஒன்று இதை குறிப்பிட்டது.

1959ம் ஆண்டு ஆயிரம் ஆண்டுகாலமாக திபெத்தில் நீடித்த அரசியலும் மதமும் இணைந்த நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை அமைப்புமுறை முடிவுக்கு வந்தது. பழைய திபெத்தின் இத்தகைய அமைப்புமுறை பின்னடைவாகவும், கொடுமையாகவும் இருளாகவும் இருந்ததை, வரலாற்று உண்மைகள், பதிவேடுகள மற்றும் தொல் பொருட்கள் அனைத்தும் காட்டுகின்றன என்று இக்கட்டுரை கூறியது. அரசியலும் மதமும் இணைந்த அமைப்புமுறையின் பொது பிரதிநிதியாகவும், மிகப் பெரிய அடிமைச் சொந்தக்காளராகவும், தலாய் லாமா இருந்தவர். ஜனநாயகச் சீர்திருத்தத்தின் நடைமுறையாக்கத்துக்கு முன்பு, 14வது தலாய் லாமா குடும்பம், திபெத்தில் 27 பண்ணைத் தோட்டங்கள், 30மேய்ச்சல் நிலங்கள் மற்றும் 6000க்கு மேற்பட்ட பண்ணை அடிமைகளை சொந்தமாக கொண்டிருந்தது. அப்போதைய நிலைமையை என்றுமே நிலைநிறுத்தும் வகையில், 1959ம் ஆண்டு மார்ச் 10ம் நாள், தலாய் லாமா தலைமையிலான திபெத் பண்ணை அடிமைச் சொந்தகாரர்களின் உயர் மட்டம், ஆயுதக் கலகத்தை நடத்தியதோடு, திபெத்தை சீனாவிலிருந்து பிரிக்கவும் முயற்சி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.