திபெத் மரபுவழி புத்தமதத் துறவிகள், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் வாழ்கின்றனர். பல நூறு ஆண்டுகாலம், பண்டைக்கால கோயில்களில் மத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மத நம்பிக்கையை பரவல் செய்து வந்தனர். திபெத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட துறைகளில், அவர்கள் முக்கிய பங்காற்றினர். 1959ம் ஆண்டு, திபெத்தில் அரசியலும் மதமும் ஒன்றிணைந்திருந்த அமைப்புமுறை ஒழிக்கப்பட்ட பின், துறவிகளின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது.
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஷிகாசெ நகரில், தாஷில்ஹூன்போ துறவியர் மடம் உள்ளது. நாள்தோறும், துறவிகள் ஐந்தரை மணி முதல் தொடர்ந்து 3 மணி நேரம், திருமறையை ஓதுகின்றனர். 69 வயதான லாமா Tsering Dorje, 10 வயதான போது, இந்த கோயிலில் சேர்ந்தார். அதற்குப் பின், திருமறையை மனனம் செய்து ஓதி வருகின்றார்.4வது பான் சான் மற்றும் அதற்குப் பிந்திய பான் சான்கள், தாஷில்ஹூன்போ துறவியர் மடத்தில் வாழ்கின்றனர். 50 ஆண்டுகளுக்கு முன், தாஷில்ஹூன்போ துறவியர் மடத்தில் 5 ஆயிரத்துக்கு மேலான துறவிகள் இருந்தனர். Tsering Dorje கூறியதாவது இந்த கோயிலில் நான் சேர்ந்த போது, ஏறக்குறைய 5 ஆயிரம் துறவிகள் இருந்தனர். அப்போது, 10வது பான்சான் இக்கோயிலுக்குத் தலைவராக இருந்தார் என்று அவர் தெரிவித்தார்.
பாரம்பரிய துறவியான Tsering Dorje வின் வாழ்க்கையை விட, அங்குள்ள இளம் துறவிகளின் வாழ்க்கை மிக நவீனமானது. 29 வயதான Dawa Tsering, இக்கோயிலில் கடந்த 10 ஆண்டுகாலமாக வாழ்கின்றார். அதற்கு முன், அவர் பள்ளியில் படித்து வந்தார். துறவியாக மாற வேண்டும் என்பது அவரது நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாகும். அவர் கூறியதாவதுதுறவியாக மாற விரும்பினேன். நாள்தோறும், மதத் திருமறையை ஓதுவது, எனது ஆர்வமாகும். அதேவேளையில், பண்பாடு, கணினி, தட்டச்சு ஆகியவற்றைக் கற்றுக்கொள்ள விரும்புகின்றேன் என்று அவர் கூறினார்.
கணினியில் அவர் மிகுந்த ஆர்வம் கொள்கின்றார். செல்லிடபேசி மூலம், சீன மொழி மற்றும் திபெத் மொழியில், அவரது நண்பர்களுக்கு குறுந்தகவல்களை அனுப்புகின்றார். தற்போது, திபெத்தின் லோகா பிரதேசத்திலுள்ள Trandrunk கோயிலின் லாமா Nyima Tsering, இக்கோயிலின் நிர்வாக நடவடிக்கைகளுக்குப் பொறுபேற்றுள்ளார். இந்த வணிக நடவடிக்கைகளின் மூலம், கோயிலின் துறவிகளை வாழ்க்கைத் தேவைகள் நிறைவேற்றப்படலாம். எனவே, துறவிகளும் மத நம்பிக்கையாளரும் மேலும் நெருக்கமாக பரிமாற்றம் செய்து வருகின்றனர். இது குறித்து, அவர் கூறியதாவதுமுன்பு, கோயிலின் துறவிகள், உயர் நிலையில் இருந்தனர். சிறப்பு நிலங்களை, அரசு துறவிகளுக்கு வழங்கியது. தொடர்புடைய மானியங்களும் வழங்கப்பட்டன.
தற்போது, இந்த நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. சொந்தமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு, சொந்த ஆற்றலைப் பயன்படுத்தி, கோயிலின் செயல்பாட்டை சிறப்பாக மேற்கொள்ளலாம். இதன் மூலம், பொது மக்களுடன் பரிமாற்றம் மேற்கொள்வதும் மிகவும் எளிதாகியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில், திபெத் இன மக்களின் வாழ்க்கை சீராக மாறியுள்ளது. கோயில்களுக்கு வழங்கப்படும் காணிக்கை அதிகரித்துள்ளது. அதேவேளையில், சீன நடுவண் அரசின் ஒதுக்கீடுகளால், துறவிகளின் வாழ்க்கை பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.திபெத்தின் நாரி பிரதேசத்தின் Burang மாவட்டத்தின் chuguo கோயிலின் வாழும் புத்தர் Losang sanden, கனிம ஊற்று நீர் தொழில் நிறுவனத்தை உருவாக்கினார். உள்ளூர் பிரதேசத்தின் 30 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தந்தார் தீர்த்தார். Losang sanden கூறியதாவது
மதம், நீண்டகாலமாக நிலவ, அது சமூகத்துக்கு ஏற்றதாக அமைய வேண்டும். இதனால், மதத்தின் உயிர் ஆற்றல் மேலும் வலிமையாக மாறும். ஆகையால், சமூகத்துக்கு பங்காற்றும் வாய்ப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.
|