2009 பெய்ஜிங் சர்வதேச சக்கர நாற்காலி நடன போட்டி
cri
2 நாள் நீடித்த 2009ம் ஆண்டு பெய்ஜிங் சர்வதேச சக்கர நாற்காலி நடன போட்டி மற்றும் ஆசிய நடன போட்டி, 22ம் நாள் பெய்ஜிங் சீன உடல் திறன் சவால் கொண்டோர் ஒலிம்பிக் மையத்தில் முடிவடைந்தது. இப்போட்டியில் முதல் முறையாக கலந்துகொண்ட சீன வீரர்கள், சேன் சீ, சுன் ஹாவ், சீராக விளையாட்டி, 3வது இடத்தை பிடித்தனர்.
ஆடவர் மற்றும் மகளிர் கைப்பந்து அணிகளின் புதிய தலைமை பயிற்சியாளரின் பெயர்பட்டியலை சீன கைப்பந்து சம்மேளனம், 23ம் நாள் பெய்ஜிங்கில் வெளியிட்டது. முன்னாள் சீன இளம் மகளிர் கைப்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் சே பின், புகழ்பெற்ற பயிற்சியாளர் சேன் சுங் ஹோவிற்கு பதிலாக, சீன மகளிர் கைப்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக மாறினார். சோ ச்சியன் அன், சீன ஆடவர் கைப்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக தொடர்கிறார்.
உலக தொழில் முறை மகளிர் டென்னிஸ் சம்மேளனம், புதிய உலக தரவரிசைபட்டியலை 23ம் நாள் வெளியிட்டது. 3 சீன வீராங்கனைகள், உலக அளவில் முன்னணி பெறும் 50 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளனர். சேன் ச்சியே, 17வது இடத்தை வகிக்கிறார். போன் சுயை, லி நா, இருவரும் முறையே 34வது மற்றும் 40வது இடங்களை வகிக்கின்றனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், உலகின் முதலிடத்தை வகிக்கின்றார்.
இவ்வாண்டின் உலக கோப்பை குளிர்கால தொடர்ப்போட்டிகளின் நார்வே போட்டி 23ம் நாள் முடிவடைந்தது. சீன வீரர்கள், சிறந்த சாதனைகளை பெறவில்லை. சீன வீராங்கனை லியு சியன் யிங், வாங் சுன் லி, மகளிர் 12.5 கிலோமீட்டர் போட்டியில் கலந்துகொண்டனர். ஆனால், அவர்கள், 27வது மற்றும் 30வது இடங்களை தான் பெற முடிந்தது. 2009ம் ஆண்டு சீன கால்பந்து தொடர்போட்டியின் முதல் சுற்றுப்போட்டி, 22ம் நாள் முழுமையாக முடிவடைந்தது. உபசரிப்பு அணிகள், சிறப்பாக வெற்றி பெற்றன. கடந்த ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்ற சன் துங் அணி, 1-1 என்ற கோல்கணக்கில் சென் ஷென் அணியை தோற்கடித்தது. ஷாங்ஹாய் அணி, 2-1 என்ற கோல்கணக்கில் ஜியாங் சூ அணியை தோற்கடித்தது. பெய்ஜிங் அணி, 3-1 என்ற கோல்கணக்கில் சுங் ச்சின் அணியை தோற்கடித்தது.
|
|