• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-25 14:25:15    
சீனத் தேசிய மக்கள் பேரவையின் திபெத் பிரதிநிதிக் குழுவின் கனடப் பயணம்

cri

கனடாவில் பயணம் மேற்கொண்டு வரும் சீனத் தேசிய மக்கள் பேரவையின் திபெத் பிரதிநிதிக் குழு, கனடாவிலுள்ள ஆசிய-பசிபிக் நிதியத்தின் தலைவருடன் 24ம் நாள் Vancouver நகரில் கலந்துரையாடல் நடத்தியது.

அப்போது, திபெத் பிரதிநிதிக் குழுவின் தலைவரும், திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவருமான வாழும் புத்தர் Shingtsa Tenzinchodrak, கடந்த சில ஆண்டுகளாக, பொருளாதாரம், சமூகம், பண்பாடு, கல்வி துறைகளில் திபெத் பெற்றுள்ள முன்னேற்றங்கள் குறித்து, விபரமாக எடுத்துக்கூறினார். திபெத்தின் மனித உரிமை இலட்சியத்தின் வளர்ச்சி, பண்பாட்டுப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட ஆசிய-பசிபிக் நிதியம் கவனம் செலுத்தும் பிரச்சினைகள் பற்றிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

திபெத் வளர்ச்சியுடன் தொடர்புடைய பல புதிய தகவல்களை இந்த பிரதிநிதிக் குழுவின் கனடப் பயணம் வழங்கியது. கனடாவின் பல்வேறு துறைகளும் உண்மையான திபெத்தை அறிந்து கொள்ள இது துணைபுரியும் என்று ஆசிய-பசிபிக் நிதியத்தின் தலைவர் தெரிவித்தார்.

இதற்கு முன், கனடாவின் Ottawa Citizen என்ற புகழ் பெற்ற செய்தி ஏட்டுக்கு வாழும் புத்தர் Shingtsa Tenzinchodrak சிறப்பு பேட்டி அளித்தார்.