அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டு வரும் சீனத் திபெத்தியல் நிபுணர் பிரதிநிதிக் குழு, அமெரிக்காவில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் சீனர் பிரதிநிதிகளுடன், திபெத் பிரச்சினை பற்றிய கலந்துரையாடலை நடத்தியது.
திபெத் வரலாறு, வளர்ச்சி, திபெத் பண்பாட்டையும் உயிரினச்சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கான சீன அரசின் மாபெரும் முயற்சிகள் ஆகியவை குறித்து, இப்பிரதிநிதிக் குழுவினர் எடுத்துக்கூறினர். அத்துடன், திபெத் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில், சீனாவுக்கான சில மேலை நாடுகளின் காரணமற்ற குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்துரைத்தனர்.
நீண்டகாலமாக, சீன நடுவண் அரசும் நாட்டின் பல்வேறு இடங்களும், பொருளாதாரம், பண்பாடு, சமூகம் முதலிய துறைகளிலான திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு மாபெரும் முயற்சிகளை மேற்கொண்டன என்று பிரதிநிதிக் குழுவின் தலைவர் Hao shiyuan குறிப்பிட்டார்.
திபெத்தின் வளர்ச்சியை கருத்தில் கொள்ளும் போது, திபெத்தின் பண்பாடு மற்றும் உயிரினச்சுற்றுச்சூழல் பாதுகாப்பை, நடுவண் அரசு எப்போதும் முக்கிய இடத்தில் வைத்து வருகின்றது. இதனால், திபெத்தின் உயிரினச்சுற்றுச்சூழல் சீராக பாதுகாக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
|