• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-26 09:43:35    
இந்தியாவிலுள்ள சீனத் தூதரகத்தின் செய்தியாளர் கூட்டம்

cri
இந்தியாவிலுள்ள சீனத் தூதரகம் 25ம் நாள் செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. அப்போது திபெத்தின் ஜனநாயகச் சீர்திருத்தத்தின் பொன்விழா பற்றி, இந்திய செய்தி ஊடகங்கள் பேட்டி காண்டன.

திபெத்தின் ஜனநாயகச் சீர்திருத்தம், சில நூற்றாண்டுகாலம் நீடித்த நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையை நீக்கி, இலட்சக்கணக்கான அடிமைகளை சுதந்திரம் பெறச் செய்துள்ளதை, வரலாறு கோடிட்டுக்காட்டுகிறது. திபெத் பொருளாதார மற்றும் பண்பாட்டுக் கட்டுமானத்தில் சீன அரசு மாபெரும் அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது, திபெத்தின மக்கள் இன்பமாகவும் இணக்கமாகவும் வாழ்கின்றனர். அவர்களது மனித உரிமையும், பண்பாடும், மத நம்பிக்கை சுதந்திரமும் முழுமையாக உத்தரவாதம் செய்யப்படுகின்றன என்று இந்தியாவிலுள்ள சீனத் தூதர் Zhang Yan செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

திபெத்தை தனிநாடாக மாற்ற விரும்பவில்லை என்று தலாய் லாமா பேசளவில் கூறினார். ஆனால், உண்மையில், அவர், சீனாவின் நான்கில் ஒரு பகுதியை சீனாவிலிருந்து பிரிக்க முயல்கின்றார் என்று Zhang Yan சுட்டிக்காட்டினார்.

தலாய் லாமா, பிரிவினை நடவடிக்கைகளை உண்மையாக கைவிட்டால், சீன அரசு அவரது பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது என்று Zhang Yan தெரிவித்தார்.

இந்தியாவின் செய்தி ஊடகங்கள் திபெத்தில் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள சமூகங்களையும் மக்களின் வாழ்க்கையையும் நேரில் பார்ப்பது வரவேற்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.