• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-26 14:34:46    
மூ மலை பள்ளத்தாக்கு

cri

நீண்டகால வரலாறு என்னும் காட்சி அரங்கில் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தொல் பொருளும், மதிப்பு மிக்கது. மூ மலை பள்ளத்தாக்கின் நீர்த்தேக்கப் பிரதேசத்தில் அதிகமான தொல்பொருட்கள் உள்ளன. மூ மலை பள்ளத்தாக்குத் திட்டப்பணியினால் இப்பிரதேசத்தின் தொல்பொருள் பாதுகாப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.
கடந்த பத்து ஆண்டுகளில், 13 இலட்சம் சதுர மீட்டர் அளவிலான பகுதியில், தொல்பொருள் ஆராய்ச்சியை செய்துள்ளோம். சீனாவின் ஹான் வம்சக் காலத்தில் பரவிய கற்தூபி உள்ளிட்ட அரிய தொல் பொருட்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்துக்கு மேலாகும் என்று வாங் சுவான்பிங் விளக்கிக்கூறினார்.      

இந்தத் தொல் பொருள் பாதுகாப்பு ஆய்வுக் குழு, மூ மலை பள்ளதாக்குப் பிரதேசத்தின் பண்பாட்டு ஒழுங்கை பதிவு செய்து, இப்பிரதேசத்திலான மனித குலத்தின் வளர்ச்சியை கண்டறிந்தது.
நிலத்தடியிலுள்ள தொல் பொருட்களைத் தவிர, பெய்ஹேலியாங், சாங்பெஃய் கோயில், ச்சீபாவ் கிராமம் உள்ளிட்ட 246 தொல்பொருட்கள் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. இதில், பெய்ஹேலியாங் என்னும் இயற்கையான பெரிய கல் குறிப்பிடத்தக்கது.இது, குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் நீர் குறைவுடையும் போது, நீருக்கு வெளியே பார்க்கப்படலாம். மழைக்காலத்தில் இது நீரில் மறைந்து விடும். இதுவரை, உலகில் ஒரேயொரு பண்டைய நீர் அணைக்கட்டாக, யுனேஸ்கோ இதை அழைத்துல்ளது. வாங் சுவான்பிங் கூறியதாவது:

இவ்வாண்டின் மே திங்களில், பெய்ஹேலியாங் பயணிகளுக்கு திறந்துவைக்கப்படும். இது, உலகில் மிக அரிதான பல்வகை தொழில்நுட்ப தொல்பொருள் பாதுகாப்புத் திட்டப்பணியாகும். அதன் கண்காட்சி வழிமுறை முன்னேறியது. சாங்பெஃய் கோயில், இடமாற்றம் மூலம் பேணிகாக்கப்பட்டது. விரைவில் பயணிகள் அங்கு வந்து பார்வையிடலாம் என்று அவர் அறிமுகப்படுத்தினார்.
சொங்சிங் மாநகரில் வாழ்கின்றவர்களைப் பொறுத்தவரை, நகரத்தின் வளர்ச்சி என்ற காட்சியரங்கு அன்பான உணர்வு கொண்டது. தட்டையான கற்சாலை, தொங்கு வீடுகள், சிகையலங்காரங்கள், தேனீர் விடுதிகள் முதலிய மாதிரிகளைக் கொண்ட பழைய சொன்சிங் நகரின் வீதியில் நடந்த போது, கடந்த காலத்துக்கு திரும்புவதைப் போன்று உணரலாம்.


தவிர, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் பற்றிய காட்சி அரங்கில், வீரஞ்செறிந்த நகரத்தின் எழுச்சியை பார்வையாளர்கள் உணர்ந்துகொள்ளலாம்.
நேயர்களே, சீனாவின் மூ மலை பள்ளத்தாக்கு அருங்காட்சியகம், வரலாற்று நூலைப் போன்றது. இதில், இந்தப் பண்டைய நிலத்தின் அனைத்து தலைசிறந்த நிகழ்ச்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இனி, சுற்றுலா தகவல்கள்:
2008ம் ஆண்டு மார்ச் 26ம் நாள், மூ மலை பள்ளத்தாக்கு அருங்காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது. ஒவ்வொரு செவ்வாய்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையான நாட்களில், காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை, பயணிகள் இலவசமாக பார்வையிடலாம். சீனாவின் மூ மலை பள்ளத்தாக்கின் வரலாற்றுப் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களில் ஆர்வம் கொண்டால், நீங்கள் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம்.