தலாய் லாமாவின் குற்றச்செயல்கள்
cri
கடந்த ஆண்டு மார்சு 14ம் நாள் லாசாவில் நிகழ்ந்த சம்பவம், தலாய் லாமா குழுவும் வெளிநாட்டு திபெத் சுதந்திர சக்தியும் இணைந்து வேண்டுமென்றே ஏற்பாடு செய்த வன்முறை சம்பவமாகும். அது அடிதடி,சீர்குலைத்தல்,கொள்ளையடித்தல் மற்றும் தீயால் நாசமாக்குதல் போன்ற வன்செயல்களில் ஈடுபட்டதற்கான சான்றுகள் உள்ளன. அதை மறுத்துரைக்க முடியாது என்று சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சின் காங் பெய்ஜிங்கில் கூறினார். தலாய் லாமா குழு அண்மையில் வெளியிட்ட இச்சம்பவம் பற்றிய ஒளித்தட்டு குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், படத்தொகுப்பு மூலமான மாற்றங்கள் உள்ளதை இந்த ஒளிப்பதிவை தெளிவாக பார்த்தால் புரியும் என்று சின் காங் கூறினார்.
|
|