• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-26 15:46:11    
திபெத் ஜனநாயக சீர்திருத்தத்தின் 50 ஆண்டுகள் எனும் கண்காட்சி

cri

சீன வெளியுறவு அமைச்சகத்தின் அழைப்பை ஏற்று, பெய்சிங்கில் நடைபெறுகின்ற திபெத் ஜனநாயக சீர்திருத்தத்தின் 50 ஆண்டுகள் பற்றிய மிக பெரிய கண்காட்சியை சீனாவிலுள்ள 150க்கு அதிகமான வெளிநாட்டு நண்பர்கள் 25ம் நாள் முற்பகல் பார்வையிட்டனர்.

சீனாவிலுள்ள 60க்கு மேலான வெளிநாட்டு தூதர்களும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அவர்களில் இடம்பெற்றனர். இக்கண்காட்சியின் மூலம், உண்மையான இன்றைய திபெத்தை உணர்ந்து கொண்டதோடு, திபெத்தில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்கள் குறித்து வியப்படைவதாக அவர்கள் தெரிவித்தனர்.

திபெத் ஜனநாயக மற்றும் சீர்திருத்தம் என்ற தலைப்பில், சீனா நடத்தும் முதலாவது மிக பெரிய கண்காட்சி, இதுவாகும். திபெத்தின் அமைதியான விடுதலை, ஆயுத கலகத்தைத் தோற்கடித்தல், திபெத்தின் ஜனநாயகச் சீர்திருத்தம், கடந்த 50 ஆண்டுகளில் ஒன்றிணைப்பு மற்றும் பிரிவினைக்குமிடை போராட்டம், முன்னேற்றம் மற்றும் பின்னடைவுக்குமிடை போராட்டம், சமூக பொருளாதார வளர்ச்சி, மனித உரிமை அடங்கிய துறைகளிலான மாபெரும் சாதனைகள் ஆகிய 5 பகுதிகள் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

இக்கண்காட்சியில், 500க்கு அதிகமான நிழற்படங்கள், 180க்கு மேலான பொருட்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவை, பழைய திபெத்தில் மேற்கொள்ளப்பட்ட இருண்ட பின்தங்கிய  நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையை எடுத்துக்காட்டுகின்றன. 1959ம் ஆண்டு தலாய் லாமா குழு நடத்திய அரசுக்கு எதிரான ஆயுதக் கலகம் பற்றிய உண்மையான வரலாறும், கடந்த 50 ஆண்டுகளில், ஜனநாயக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின், திபெத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவை இக்கண்காட்சியில் விளக்கப்படுகின்றன. கூறப்படும் திபெத் பிரச்சினை பற்றி தலாய் லாமா குழு பரப்பிய பல்வகை பொய் கூற்றுகள் உண்மையான சான்றுகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

கண்காட்சி வடிவத்தில், திபெத்தின் வளர்ச்சி மற்றும் மாற்றங்களையும் வெளிப்படுத்துவது என்பது, சிறந்த வழிமுறையாகும். கண்காட்சியின் மூலம், கடந்த 50 ஆண்டுகளில், திபெத்தில் நிகழ்ந்த உண்மையான மாற்றங்களை மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்று சீனாவிலுள்ள Ghana தூதரகத்தின் அமைச்சரும் கவுன்சிலருமான Akwasi Agyeman Agyare கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

முன்பு, திரைப்படங்களைக் கண்டு ரசிப்பதன் மூலம், திபெத் தொடர்பான சில தகவல்களை நாங்கள் அறிந்து கொண்டுள்ளோம். ஆனால், இது பக்க சார்பானது. இன்றைய நடவடிக்கையின் மூலம், திபெத் வளர்ச்சி பற்றிய உண்மைகளை நான் அறிந்தேன். தலாய் லாமா குழு பயந்து, திபெத் பிரச்சினை பற்றி ஒன்றுக்கு பத்தாக பேசி வருகின்றது என்று கருதுகின்றேன். திபெத் தொடர்பான சில தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது. திபெத்தின் உண்மையான வளர்ச்சியை முழுமையாக அறிந்து கொள்ள விரும்பியால், திபெத்தின் வளர்ச்சியை நேரிடையாக சென்று பார்க்க வேண்டும் என்று நான் கருதுகிறேன் என்றார் அவர்.

தவிர, திபெத்தியல் ஆராய்ச்சி மையத்தின் நிபுணர்கள், கண்காட்சியில், வெளிநாடுகளின் தூதர்களுடன் மனம் திறந்த நட்புப் பரிமாற்றத்தை மேற்கொண்டனர். வெளிநாட்டு நண்பர்களின் கேள்விக்கு அவர்கள் உணர்வுபூர்வமாகவும் விபரமாகவும் பதிலளித்தனர். திபெத் பற்றிய சீன அரசின் கொள்கைகளை ஆழமான முறையில் விளக்கி கூறினர். சான்றுகள் மற்றும் புள்ளிவிபரங்கள் மூலம், ஜனநாயக சீர்திருத்தம் மேற்கொள்ளப்டட்ட 50 ஆண்டுகளில், அரசியல், சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் திபெத் பெற்றுள்ள மாபெரும் சாதனைகளை எடுத்துக்கூறினர்.

திபெத் வளர்ச்சிக்கான சீன நடுவண் அரசின் மாபெரும் முயற்சிகளை, திபெத் பெற்றுள்ள சாதனைகள் வெளிப்படுத்துகின்றன என்று கியூபத் தூதர் Carlos Miguel Pereira தெரிவித்தார். அவர் கூறியதாவது:

நவ சீனா நிறுவப்பட்ட பின், குறிப்பாக சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட 30 ஆண்டுகளில், திபெத் மக்களின் வாழ்க்கை நிலைமை அதிகமாக மேம்படுத்தப்பட்டு, தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது, புகழ்ந்து பாராட்டத்தக்கது. இது, திபெத் வளர்ச்சிக்கான சீன நடுவண் அரசின் முயற்சிகளை மட்டுமல்ல, திபெத் வளர்ச்சிக்கான மன உறுதியையும் வாக்குறுதியையும் வெளிப்படுடுத்துகிறது என்றார் அவர்.