• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-26 20:50:38    
அடிமைகளிலிருந்து நாட்டின் உரிமையாளர்களாக

cri

நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமைகளிலிருந்து நாட்டின் உரிமையாளர்களாக மாறுவதென்ற திபெத் மக்களது வாழ்க்கையின் மாபெரும் வரலாற்று மாற்றம் என்ற தலைப்பிலான கட்டுரையை, சீனாவின் சின்குவா செய்தி நிறுவனம் 26-ஆம் நாள் வெளியிட்டது.

திபெத்தின் பல்வேறு தேசிய இனங்கள் சமநிலையான வாழ்க்கை மற்றும் வளர்ச்சியுரிமையை கூட்டாக அனுபவித்து, உடைப் பிரச்சினையைத் தீர்த்து, செல்வச் செழிப்பு பெறுவது என்பது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தலைவர்கள் குழு எப்போதும் கவனம் செலுத்தி, முழுமூச்சுடன் ஏற்பாடு செய்து, பெரிதும் முன்னேற்றும் பணியாகும் என்று, இக்கட்டுரை குறிப்பிட்டது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி திபெத் பணி பற்றிய 4 கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி, திபெத் வளர்ச்சிக்கான சிறப்பு முன்னுரிமைச் சலுகைக் கொள்கைகளையும் வளைந்து கொடுக்கும் நடவடிக்கைகளையும் வெளியிட்டது. 2008ம் ஆண்டு வரை, திபெத் வளர்ச்சிக்கு,நடுவண் அரசு மொத்தம் 10ஆயிரம் கோடி யுவானை ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறப்பிடத்தக்கது.

ஜனநாயகச் சீர்திருத்தத்தின் மூலம், திபெத்தின் லட்சக்கணக்கான பண்ணை அடிமைகள் விடுதலை பெற்றனர். அவர்களது உயிர் பாதுகாப்பும் சுதந்திரமும், சீன மக்கள் குடியரசின் அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் இதர சட்டவிதிகளால் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், அவர்கள், நாடு மற்றும் திபெத்தின் உரிமையாளர்களாக மாறியுள்ளனர் என்று கட்டுரை கூறியது.