• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-26 11:40:51    
திபெத்தின் ஜனநாயக சீர்திருத்தம்

cri

சீனாவில் முதல் முதலாக கொண்டாடப்படும் "திபெத்தின் 10 இலட்சம் அடிமைகள் விடுதலை பெற்ற நினைவு நாள்" மார்ச் 28ம் நாளாகும். 1959ம் ஆண்டு, திபெத் ஜனநாயக சீர்திருத்ததால் ஏற்பட்ட விடுதலை என்பது கடந்த சில நுறு ஆண்டுகளில், அடிமை அமைப்பு முறையை மனித குலம் துடைத்தொழிக்கும் இயக்கத்தின் தொடர்ச்சியாகும். திபெத்தின் ஜனநாயக சீர்திருத்தம் துவக்கத்திலேயே உலகளவிலான அங்கீகாரத்தைப் பெற்றது என்று மக்கள் நாளேடு, 26ம் நாள் வெளியிட்ட "உலக மனித உரிமை வரலாற்றிலான ஒளிமயமான அத்தியாயம்" என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டியது.

1959ம் ஆண்டு மார்ச் 10ம் நாள், 14வது தலாய் லாமா தலைமையிலான திபெத் உயர்மட்ட குழு, தாய்நாட்டைப் பிளவுப்படுத்தும் ஆயுதந்தரித்த கலகத்தை தொடுத்தது. மார்ச் 28ம் நாள் சீன நடுவண் அரசின் தலைமையில், திபெத்தின் பல்வேறு தேசிய இன மக்கள் அக்கலகத்தை அடக்கி, ஜனநாயக சீர்திருத்தத்தை மேற்கொண்டு, இருள் செறிந்த நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையை துடைத்தொழித்தனர். அபோபது 10 இலட்சம் அடிமைகள் விடுதலை பெற்றனர்.

அத்துடன், திபெத் மக்கள் மத நம்பிக்கை சுதந்திரத்தைப் பெற்று, மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்சியை உருவாக்கி, மக்கள், நாட்டின் உரிமையாளர் என்ற உரிமையை மக்கள் அனுபவிக்க துவங்கினர் என்று கட்டுரை கூறுகின்றது.

திபெத்தின் ஜனநாயக சீர்திருத்தம் சீன மனித உரிமை வளர்ச்சியின் இயல்பான விளைவு. இது துவக்கத்திலேயே. உலகின் விரிவான அங்கீகாரத்தைப் பெற்றது என்று கட்டுரை சுட்டிக்காட்டியது.