திபெத் பண்ணை அடிமைகளின் விடுதலை நாளாக, மார்ச் 28ம் நாள் நெருங்கி வருகிறது என்ற அறிவிப்பை ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள சீனப் பிரதிநிதிக் குழுவின் தலைவர் சோங்ச்சே அண்மையில், ஐரோப்பிய நாளாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பிய வெளிப்படைக் கடிதத்தில் வெளியிட்டார். இதில், திபெத்தின் ஜனநாயகச் சீர்திருத்தம் செயல்படுத்தப்பட்ட கடந்த 50 ஆண்டுகளாக, திபெத் பெற்றுள்ள அதிகமான சாதனைகளையும், தலாய் லாமா தொடர்பான சீன அரசின் கொள்கைகளையும் அவர் அறிமுகப்படுத்தினார். இக்கடிதம், அவர்கள் திபெத்தை அறிந்து கொள்வதற்கு உதவி செய்யலாம்.
50 ஆண்டுகளுக்கு முந்திய ஜனநாயகச் சீர்திருத்தம், திபெத் வளர்ச்சி வரலாற்றில் மிக விரிவான, ஆழமான, மாபெரும் சமூக மாற்றமாகும். மனிதகுலத்தின் நாகரிக வளர்ச்சி வரலாற்றிலும், உலக மனித உரிமை வரலாற்றிலும் முக்கித்துவம் வாய்ந்த மாபெரும் முன்னேற்றமும் ஆகும். இவற்றை, அவர், ஏராளமான உண்மைகள் மற்றும் தகவல்களின் மூலம் மீண்டும் கோடிட்டுக்காட்டினார். தற்போது, திபெத் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி, பண்பாட்டு செழுமை, மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு, தேசிய இனங்கள் ஒற்றுமை ஆகியவற்றைக் கொண்ட சிறந்த வரலாற்றுக் காலத்தில் உள்ளது என்று அவர் கடிதத்தில் தெரிவித்தார்.
தலாய் லாமா, பழைய திபெத்தின் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை சொந்தகாரரின் தலைமைப் பிரதிநிதியாக இருப்பதோடு, நாட்டைப் பிரிக்கும் நடவடிக்கைகளையும் ஒருபோதும் நிறுத்தவில்லை என்றும் சோங்ச்சே சுட்டிக்காட்டினார்.
திபெத், சீனாவின் உரிமை பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்ட முடியாத ஒரு பகுதியாகும். திபெத் பற்றிய பிரச்சினைகள், சீனாவின் உள்விவகாரங்களாகும். எந்த நாடோ அல்லது நிறுவனமோ திபெத் பிரச்சினையைப் பயன்படுத்தி, சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை சீனா எதிர்க்கிறது என்று அவர் அதில் உறுதிப்படுத்தியுள்ளார்.
|