திபெத்தின் இலட்சக்காணக்கான பண்ணை அடிமைகளின் விடுதலை விழாவிற்கு, மக்கள் நாளேடு 28ம் நாள் வெளியிட்ட தலையங்கம் ஆரவாரமாக வாழ்த்து தெரிவித்தது.
இவ்வாண்டின் ஜனவரி திங்கள் 19ம் நாள், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 9வது மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தில், இந்த விடுதலை விழா நிறுவப்படுவது தொடர்பான முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக சீர்திருத்தத்தை நினைவு கூர வேண்டும். திபெத்தின் பல்வேறு தேசிய இன மக்களின் பொது விருப்பம் இதுவாகும். இது வரலாறு மற்றும் நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்தது என்று இக்கட்டுரை தெரிவித்தது.
கடந்த 50 ஆண்டுகளில், நடுவண் அரசு மற்றும் நாட்டு மக்கள் அனைவரின் ஆதரவுடன், திபெத்தில் கணிசமான முன்னேற்றங்கள் காணப்படுகின்றன. சீன எதிர்ப்பு ஆற்றலின் உதவியுடன், தலாய்லாமா குழு, தாய்நாட்டை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. திபெத் மற்றும் பல்வேறு இன மக்களும் இச்செயலை உறுதியாக எதிர்த்து வருகின்றனர்.
திபெத், புதிய வரலாற்றுத் துவக்கப் புள்ளியில் நின்று, திபெத் பற்றிய கோட்பாடுகளையும் கொள்கைகளையும், தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. இதன் மூலம், திபெத் பொருளாதாரம் பெரிதும் வளர்ந்து, நாடு மற்றும் திபெத்தின் நிதானத்தையும் உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று இக்கட்டுரை தெரிவித்தது.
|