• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-27 11:39:43    
உண்மையான திபெத் பற்றிய விளக்கம் அறிந்து கொள்வது

 


cri
சீன சமூக அறிவியல் கழகத்தின் தேசிய இனம் மற்றும் மனித குல ஆய்வகத்தின் தலைவர் hao shi yuanஇன் தலைமையிலான சீனத் திபெத்தியல் அறிஞர்கள் பிரதிநிதிக்குழு, நடப்பு வாரம், வாஷிங்டனில், அமெரிக்க அரசு, நாடாளுமன்றம், செய்தி ஊடகங்கள் முதலிய பல்வேறு துறையினருடன் பரந்த பரிமாற்றங்களை மேற்கொண்டது. அக்குழு, அமெரிக்காவில் பயில்கின்ற சீன மாணவர்கள், அங்கே வாழ்கின்ற சீனர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நடத்தியதோடு Maryland பல்கலைக்கழகத்தில் சிறப்பு கருத்தரங்கும் மேற்கொண்டது. திபெத்தின் வரலாறு, பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி நிலையையும், திபெத் இனப் பண்பாடு மற்றும் உயிரினச் சுற்றுச்சூழலுக்கு நடுவண் அரசு மேற்கொண்ட மாபெரும் முயற்சிகளையும் இந்த குழுவில் இடம்பெற்ற திபெத்தியல் அறிஞர்கள் எடுத்துக்கூறினர். திபெத் பிரச்சினையில், அமெரிக்காவின் முக்கிய சமூகத்தினரில் சில தவறான எண்ணங்களை தங்களுடைய சான்றுகளால் விளக்கி தெளிவுப்படுத்தியுள்ளனர். hao shi yuan கூறியதாவது

முதலாவதாக திபெத் பிரச்சினையில், மேலை நாட்டு சமூகங்களிடம் நிலவுகின்ற பொது கருத்துக்களில் தவறான எண்ணங்களை எமது தொடர்புகள் தெளிவுப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, திபெத்தின் உண்மையான நிலையும் வரலாறும் வெளிப்படுத்தப்பட வேண்டும். மூன்றாவதாக, புதிய பரஸ்பர பரிமாற்றங்கள் நடைபெறும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என்று அவர் கூறினார். அவர்கள், விளக்கங்களை அளித்த பிறகு, அமெரிக்க மக்கள், தமது ஐயங்களை நீக்கி எதிர்த்தரப்பின் கருத்துக்களை உறுதிப்படுத்துவர் என்று hao shi yuan நம்பிக்கை தெரிவித்தார். அமெரிக்காவிலுள்ள சீனாவுக்கான கல்லூரிகளின் சம்மேளனத்தின் தலைவர் li ge கூறியதாவது

திபெத் பற்றிய தவறான கருத்துக்களை வெளியிட்ட சில முக்கிய செய்தி ஊடகங்கள் அமெரிக்க மக்களின் மனங்களில் விதைத்துள்ளனர். உண்மையான திபெத் பற்றி, அவர்களுக்கு தெரியாது. திபெத் மக்களைப் பார்த்திருகின்றீர்களா என்று கேட்டால் அவர்கள் இல்லை என்று பதிலளிப்பர். திபெத் மக்களைப் பார்க்காமல், அவர்கள் எப்படி கருத்து வெளியிட முடியும்? அதேபோல திபெத் மக்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று அவர்கள் என்னை கேட்கின்றனர். நானும் இல்லை என்று பதிலளிக்கின்றேன். இன்று, பிரதிநிதிக்குழு தலைவர் hao ஆற்றிய முறையான ஆய்வால், திபெத்தை மேலும் அதிகமாக அறிந்து கொள்ள நம்மால் முடிந்தது. எதிர்வரும் நாட்களில், அமெரிக்க நண்பர்களுடன் திபெத் பற்றி பேசுகின்ற போது, நாம், நியாயமான வாதங்களை முன்வைக்கலாம் என்று li ge கூறினார்.

சீனத் திபெத்தியல் அறிஞர்கள் பிரதிநிதிக்குழு, Maryland பல்கலைக்கழகத்திலுள்ள கன்ஃபுசியெஸ் கழகத்தில், மாபெரும் வளர்ச்சி போக்கிலுள்ள சீன மேற்குப் பகுதியின் பண்பாட்டு மற்றும் இயற்கைச் சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பிலான கருத்தரங்கு நடத்தியது. உள்நாட்டு வெளிநாட்டு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சீனாவின் மேற்குப் பகுதிப் பிரதேசங்களின் பண்பாடுகள் மற்றும் உயிரின சுற்றுச்சூழலின் பாதுகாப்பு வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும் இக்குழு எடுத்துக்கூறியது. திபெத்தை அறிந்து கொள்வதில் திபெத்தியல் அறிஞர்களின் ஆய்வு, எனக்கு புதிய பார்வை வழங்கியது என்று Maryland பல்கலைக்கழகத்திலுள்ள கன்ஃபுசியெஸ் கழகத்தின் ஆசிரியர் fan ruojie அம்மையார் கூறினார்.

பல ஆண்டுகளாக, சீன மொழியைப் படித்த போதிலும், நான் திபெத்தை அதிகமாக அறிந்து கொள்ளவில்லை. நிலப்படத்தில் திபெத் இருக்கும் இடத்தை மட்டுமே அறிந்து கொண்டேன். பண்பாட்டை பொறுத்த வரை, குறிப்பாக, செய்தி ஊடகங்களின் கட்டுரைகள் நடுநிலையாக எழுதப்படுகிறதா என்பதை கண்டறிய வேண்டும். செய்தி ஊடகங்களின் கட்டுரைகளிலிருந்து மட்டும் உண்மையான திபெத்தை அறிந்து கொள்ள முடியாது. பல்வேறு தரப்புகளின் கருத்துக்களை நான் கேட்டறிய விரும்புகின்றேன் என்றார் அவர்.

கல்வியல் ஆய்வு மற்றும் தமது அனுபவங்களை கொண்டு சீனத் திபெத்தியல் அறிஞர்கள் பிரதிநிதிக்குழு, அளித்த விளக்கங்கள், அமெரிக்க மக்களுக்கு திபெத் பிரச்சினையைப் புறநிலையாக அறிந்து கொள்ள துணைபுரிந்தன.