• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-27 09:53:24    
NBA கூடைப்பந்து அணிகளுக்கிடைபோட்டி

cri
23ம் நாள் நடைபெற்ற NBA கூடைப்பந்து அணிகளுக்கிடைபோட்டியில், சீன வீரர் யாவ் மிங் தலைமையிலான HOUSTON ROCKETS அணி, 87-85 என்ற புள்ளிக்கணக்கில், உபசரிப்பு அணியான SAN ANTONIO SPURS அணியை தோற்கடித்தது. கடந்த 4 போட்டிகளிலும், யாவ் மிங்கின் அணி வெற்றி பெற்றது. யாவ் மிங் 13 புள்ளிகளையும் 8 ரேன்பென்களை பெற்றார்.
இன்னொரு சீன வீரர் யீ ச்சியன் லியன் விளையாடுகின்ற NEW JERSEY NETS அணி, 88-96 என்ற புள்ளிக்கணக்கில் CLEVELAND CAVALIERS அணியிடம் தோல்வியடைந்தது. யீ ச்சியன் லியன் 4 புள்ளிகளையும் 4 ரேன்பென்களை பெற்றார். CLEVELAND CAVALIERS அணி, கடந்த 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 57 வெற்றி மற்றும் 13 தோல்வி என்ற சாதனையை கொண்டு, அணிகளுக்கிடையிலான போட்டி தொடரில் முதலிடத்தில் வகிக்கின்றது.
22ம் நாள் முடிவடைந்த போட்டிகளில், LOS ANGELES LAKERS அணி, 117-109 என்ற புள்ளிக்கணக்கில், உபசரிப்பு அணியான CHICAGO BULLS அணியை தோற்கடித்தது. CLEVELAND CAVALIERS அணி, 102-96 என்ற புள்ளிக்கணக்கில் Atlanta Hawks அணியை தோற்கடித்தது.
2009ம் ஆண்டு சீன கால்பந்து தொடர்போட்டியின் முதல் சுற்றுப்போட்டி, 22ம் நாள் முழுமையாக முடிவடைந்தது. உபசரிப்பு அணிகள், சிறப்பாக வெற்றி பெற்றன. கடந்த ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்ற சன் துங் அணி, 1-1 என்ற கோல்கணக்கில் சென் ஷென் அணியை தோற்கடித்தது. ஷாங்ஹாய் அணி, 2-1 என்ற கோல்கணக்கில் ஜியாங் சூ அணியை தோற்கடித்தது. பெய்ஜிங் அணி, 3-1 என்ற கோல்கணக்கில் சுங் ச்சின் அணியை தோற்கடித்தது.
பெய்ஜிங் நேரப்படி, 22ம் நாள் விடியற்காலை, இங்கிலந்து கால்பந்து அணிகளுக்கிடைபோட்டியின் 30வது சுற்றுப்போட்டி முடிவடைந்தது. TOTTENHAM HOTSPUR அணி, 1-0 என்ற கோல்கணக்கில், CHELSEA அணியை எதிர்பாராதவிதமாய் தோற்கடித்தது. MANCHESTER UNITED அணி, 0-2 என்ற கோல்கணக்கில் FULHAM அணியிடம் தோல்வியடைந்தது. இது கடந்த 47 திங்களில், 2 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைவது, இது முதன்முறையாகும்.
இங்கிலந்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் காபல்லோ, 23ம் நாள், புதிய தேசிய அணியின் பெயர்பட்டியலை வெளியிட்டார். MANCHESTER UNITED அணியின் கோல் காப்பாளர் பென் ஃபாஸ்டர் முதன்முறையாக தேசிய அணியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார். திட்டப்படி, நடப்பு வார இறுதியில் அங்கிலாந்து அணி, ஸ்லோவாக்கிய அணியுடன் நட்புப்போட்டியில் பங்கேற்கும். ஏப்ரல் முதல் நாள், உக்ரேன் அணியுடன், 2010ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான தேர்வு போட்டியில் கலந்துகொள்ளும்.