• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-27 17:33:01    
திபெத்தின் சுற்றுலா வளர்ச்சி

cri
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசம், தலைச்சிறப்பான வரலாற்றுப் பண்பாடு மற்றும் இயற்கைக் காட்சிகளைக் கொண்டதால், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் வர விரும்பும் இடமாகவுள்ளது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப்பணி நடைமுறைப்படுத்திய பிறகு, குறிப்பாக, சிங்ஹாய்-திபெத் இருப்புப்பாதை போக்குவரத்து திறந்து வைக்கப்பட்ட பின், திபெத்தின் சுற்றுலாத் துறை சுறுசுறுப்பாக வளர்ச்சியடைந்து வருகிறது. உள்ளூரின் பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் மேம்பட்டுள்ளன.

பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளைப் பொறுத்தவரை, திபெத்தின் பண்டைய கோயில்கள், அழகான இயற்கைக் காட்சிகள், திபெத் இன தனிச்சிறப்பியல்புடைய கைவினை கலைப்பொருட்கள் ஆகியவை ஈர்ப்பாற்றல் மிக்கவை. திபெத் கம்பளம், திபெத்தின் பாரம்பரியக் கைவினை கலைப் பொருட்களில் குறிப்பிடத்தக்கது.

திபெத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன், பாரம்பரிய திபெத் கம்பளம் மென்மேலும் வரவேற்கப்பட்டது. லாசா நகரத்தின் செங்குவான் கம்பள தொழிற்சாலையின் உரிமையாளரது உதவியாளர் தேஜிதோகர் அம்மையார் எமது செய்தியாளரிடம் இவ்வாறு கூறினார்.

திபெத் கம்பளங்கள், ஆட்டின் முடியை மூலப்பொருளாகக் கொண்டு, பாரம்பரிய கைவினை பின்னல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன என்று அவர் அறிமுகப்படுத்தினார்.

திபெத் கம்பளங்களைத் தவிர, பாரம்பரிய திபெத் வீட்டு பாத்திரங்கள் தயாரிப்பு, திபெத் கத்திரி முதலியவை, சுற்றுலாத் துறையின் வளர்ச்சியினால் நலன் பெற்றன. புள்ளிவிபரங்களின் படி, திபெத்தில், தேசிய இன கைவினைத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, நூற்றுக்கு அதிகமாகும். அதன் ஆண்டு உற்பத்தி மதிப்பு, பத்து கோடிக்கணக்கான யுவானைத் தாண்டியுள்ளது.

தவிர, தேசிய இன பாணியுடைய தங்கு விடுதியை நடத்துவது, திபெத் மக்கள் நலன் பெறும் மற்றொரு வழிமுறையாகும். 1986ம் ஆண்டு ரிகாசே நகரில் திறந்து வைக்கப்பட்ட தாம்சான் தங்கு விடுதி, மிகவும் புகழ்பெற்றது. பல நாடுகளின் திபெத் சுற்றுலா வழிகாட்டு புத்தகங்களில், இவ்விடுதி இடம்பெறுகின்றது. அதன் மேலாளர் சொருங் அம்மையார் கூறியதாவது:

என் தந்தை, நேபாளத்தில் வணிக விவகாரத்தில் ஈடுபட்டார். சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்புக்குப் பின், அவர் இந்த விடுதியைத் திறந்து வைத்தார் என்று அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளில், சுற்றுலாத் துறையின் வளர்ச்சியுடன், திபெத்தில் தனிநபர் தங்கு விடுதிகள் மென்மேலும் அதிகரித்துள்ளன. தாம்சான் தங்கு விடுதி, திபெத் உணவுவகைகளை இலவசமாக வழங்குவது உள்ளிட்ட தனிச்சிறப்பான சேவைகளில் ஊன்றிநின்று வருகிறது. இதனால், அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, நியுசிலாந்து, இஸ்ரேல் முதலிய நாடுகளின் பயணிகளை இது ஈர்த்துள்ளது.

பாராம்பரிய சுற்றுலாவை வளர்ப்பதோடு, திபெத் தன்னாட்சிப் பிரதேசம், வேளாண்மை மற்றும் மேய்ச்சல் பிரதேசங்களில் உயிரின வாழ்க்கை மற்றும் நாட்டுப்புறச் சுற்றுலாவையும் வளர்க்கிறது. நிங்ச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள நாம்சே கிராமம், உயிரினச் சுற்றுலாவில் ஈடுபடுவதன் மூலம், கிராமவாசிகளின் வாழ்க்கை மேம்பட்டுள்ளது.

இக்கிராமத்தின் இளம் துணைத் தலைவர் நிமா, நம்சே கிராமத்தின் மாற்றங்களை கண்கூடாக கண்டவர். தற்போதைய வாழ்க்கை நிலைமை பற்றி, அவர் மிகழ்ச்சியுடன் கூறியதாவது:

முதலில், எமது நம்சே கிராமம், நிலவியல் மேம்பாட்டைக் கொண்டதாகும். கிராமவாசிகள், வட்டத்தில், உள்ளூர் தனிச்சிறப்புப் பொருட்கள், பயணிகளை திபெத் இன மக்களின் வீட்டில் தங்க வைப்பது, உணவு விடுதி, சேவை, கைவினை கலைப் பொருட்கள் தயாரிப்பு முதலியவற்றில், ஈடுபடுகின்றனர். தற்போது, பொது மக்களின் கருத்து மாறியிருக்கிறது. சுற்றுலா, பிரதேசம் மற்றும் மூலவளங்களின் மேம்பாடுகளைப் பயன்படுத்தி, வளர்ச்சியடைவதை அறிந்துகொண்டனர். எமது கிராமத்தின் முக்கிய வருமானத்தில், சுற்றுலா மூலமான வருமானம், சுமார் 70 விழுக்காடு வகிக்கிறது என்று அவர் அறிமுகப்படுத்தினார்.