சின் குவா செய்தி நிறுவனத்தின் கட்டுரை
cri
இவ்வாண்டு மார்சு 28ம் நாள் திபெத்தின் இலட்சக்கணக்கான பண்ணை அடிமைகள் விடுதலை பெற்ற பொன் விழாவாகும். அற்புத திபெத்தில் வாழும் 28 இலட்சத்து 70 ஆயிரம் சகோதர சகோதரிகள் இன்பமாக வாழ வேண்டும் என்று 27ம் நாள் சின் குவா செய்தி நிறுவனம் கட்டுரை வெளியிட்டு வாழ்த்தியது. கடந்த 50 ஆண்டுகளில், திபெத்தின் சமூக மற்றும் பொருளாதாரத் துறையில் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகள் பெறப்பட்டுள்ளன. திபெத் மக்கள் நாட்டின் உரிமையாளராகியுள்ளனர். சீன அரசுத் தலைவர் ஹு சிந்தாவ் அண்மையில் உரை நிகழ்த்தி, திபெத்தின் எதிர்காலப் பணிக்கு வழிகாட்டினார் என்று கட்டுரை கூறியது. ஒற்றுமையும் நிதானமும் மக்களின் இன்பமாகும். பிரிவினையும் கலகமும் மக்களுக்கு துன்பத்துயரங்களை மட்டுமே கொண்டு வரும். ஜனநாயக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 50 ஆண்டுகளில் திபெத்தின் பல்வேறு தேசிய இன மக்கள் பெற்ற அரிய அனுபவம் இதுவாகும் என்று கட்டுரை சுட்டிக்காட்டியது.
|
|