1959ம் ஆண்டு திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்த பின், தேசிய இனம் மற்றும் பிரதேசத் தனித்தன்மைக்கு பொருந்திய நவீனமயமாக்கக் கல்வி இலட்சியம் செயல்படுத்தப்பட்டது. திபெத்தின் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த குழந்தைகள் இத்தகைய கல்வியை பெற்று வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் பயணம் மேற்கொண்ட சீனத் தேசிய மக்கள் பேரவையின் திபெத் பிரதிநிதிக்குழு 27-ம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் துணைத் தலைவர் ஷிங்ட்ஸ டென்சின்சோத்ராக் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது, மாணவர்கள் துவக்க பள்ளிக்கட்டத்தில் முக்கியமாக திபெத் மொழியை கற்றுக்கொள்கின்றனர். இடை நிலைப் பள்ளிக் கட்டத்தில் சீன மொழியைக் கற்றுக்கொள்ளத் துவங்குகின்றனர். சில பள்ளிகளில் மாணவர்கள் ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
|