திபெத்தின் இலட்சக்காணக்கான பண்ணை அடிமைகளின் விடுதலை விழாவின் கொண்டாட்ட கூட்டம் 28ம் நாள் காலையில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான லாசாவில் ஆரவாரமாக நடைபெற்றது.
1959ம் ஆண்டின் மார்ச் திங்கள் 28ம் நாள், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் துவங்கியது. அரசியலும் மதமும் ஒருங்கிணையும் பண்ணை அடிமை அமைப்புமுறை ஒழிக்கப்பட்ட பின், இலட்சக்காணக்கான பண்ணை அடிமைகள் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வாண்டின் ஜனவரி திங்கள், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 9வது மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தில், இந்த விடுதலை விழா நாள் நிறுவப்பட்டு ஆண்டுதோறும் இனிமேல் கொண்டாடப்படுவது தொடர்பான முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 13 ஆயிரம் பிரதிநிதிகள், இக்கொண்டாட நடவடிக்கைகளில் பங்கெடுத்தனர்.
|