• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-28 11:43:26    
தற்போதைய திபெத்

cri

திபெத்தின் இலட்சக்காணக்கான பண்ணை அடிமைகளின் விடுதலையை நினைவு கூரும் விழா கொண்டாட்டம் 28ம் நாள் காலையில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான லாசாவில் ஆரவாரமாக நடைபெற்றது.


காலை 10 மணியில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் qangba puncog இக்கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார்.


திபெத்தின் ஜனநாயகச் சீர்திருத்தம், உலகில் அடிமை அமைப்புமுறையை ஒழிக்கின்ற இயக்கத்தின் முக்கிய பகுதியாகும். சர்வதேச மனித உரிமை இலட்சியத்தின் முக்கிய வளர்ச்சியாகவும் இது விளங்குகிறது. உலகின் ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மனித உரிமை இலட்சியத்துக்கு சீனா முக்கிய பங்காற்றுவதை இது எடுத்துக்காட்டுகிறது என்று திபெத்தின் கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டித் தலைவர் zhangqingli இதில் உரையாடிய போது தெரிவித்தார்.


1959ம் ஆண்டின் மார்ச் திங்கள் 28ம் நாள், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் துவங்கியது. அரசியலும் மதமும் ஒருங்கிணையும் பண்ணை அடிமை அமைப்புமுறையை ஒழித்த பின், இலட்சக்காணக்கான பண்ணை அடிமைகள் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வாண்டின் ஜனவரி திங்கள் நடைபெற்ற திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 9வது மக்கள் பேரவையின் 2வது கூட்டத்தில், இந்த விடுதலை விழா நாள் இவ்வாண்டு முதல் நிறுவப்பட்டு இனிமேல் ஆண்தோறும் கொண்டாப்படுவது தொடர்பான முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.


கடந்த 50 ஆண்டுகளில், திபெத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய இலட்சியங்கள், மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளன. திபெத்தின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றத்தை சீனா தொடர்ந்து விரைவுபடுத்தும். தவிர, நாட்டின் பாதுகாப்பு மற்றும் திபெத்தின் நிதானத்தை உத்தரவாதம் செய்ய சீனா முழு மூச்சுடன் பாடுபடும் என்று zhangqingli தெரிவித்தார்.


திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 13 ஆயிரம் பிரதிநிதிகள், இக்கொண்டாட நடவடிக்கைகளில் பங்கெடுத்தனர்.