• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-28 16:50:25    
திபெத்தின் ஜனநாயக சீர்திருத்தத்தின் 50 ஆண்டுகள்

cri

சீனாவின் திபெத்தின் இலட்சக்கணக்கான பண்ணை அடிமைகள் விடுதலை பெற்ற பொன் விழாவை நினைவு கூரும் வகையில் ஸ்பெயினில் வாழ்கின்ற சீனர்கள் மற்றும் சீன மாணவர்களின் பிரதிநிதிகள் 27ம் நாள் மாட்ரிட்டிலுள்ள சீனர் சங்கத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினர். சமூகப் பொருளாதார வளர்ச்சி முதலிய துறைகளில் திபெத் பெற்றுள்ள மாபெரும் சாதனைகளை அவர்கள் பாராட்டினர். தலாய்லாமா குழு சீன எதிர்ப்பு சக்திகளுடன் சேர்ந்து தாய்நாட்டை பிளவுபடுத்திய செயல்களை அவர்கள் கண்டித்தனர்.


அரசியல் மற்றும் மதம் ஒருங்கிணைந்த நிலப்பிரப்புத்துவ பண்ணை அடிமை அமைப்பு முறையிலுள்ள பழைய திபெத் பண்ணை உரிமையாளர்களின் சொர்க்கமும் பண்ணை அடிமைகளின் நரகமும் ஆகும். 1959ம் ஆண்டு மார்ச் திங்கள் ஜனநாயக சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின் திபெத்தில் ஜனநாயகம் மற்றும் சட்டக் கட்டுமானம் முழுமையாகியுள்ளது. பாரம்பரியப் பண்பாடு மற்றும் மத நம்பிக்கை போதியளவில் மதிப்பளிக்கப்பட்டுள்ளது. திபெத் மக்களின் வாழ்க்கை நிலை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இவையனைத்தும் வெளிநாடுகளில் வாழ்கின்ற மிக பல சீனர்கள் கண்டறிந்த உண்மையாகும் என்று கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டோர் குறிப்பிட்டனர்.
ஸ்பெயினுக்கான சீனத் தூதர் ஜுப்பான்சௌயும் இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார்.