• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-28 11:10:49    
சீனத் தலைவர்கள் திபெத் கண்காட்சியை பார்வையிட்டனர்

cri

திபெத்தின் இலட்சக்கணக்கான அடிமைகள் விடுதலை பெற்ற நினைவு நாளை முன்னிட்டு, ஹுசிந்தாவ், வூபாங்கோ, வென்சியாபாவ், ஜியாச்சிங்லின், லீசாங்சுன், சிச்சியின்பிங் முதலிய சீனத் தலைவர்கள், பெய்ஜிங் தேசிய இன பண்பாட்டு மாளிகையில் நடைபெற்ற திபெத் ஜனநாயகம் மற்றும் சீர்திருத்தத்தின் 50 ஆண்டுகள் பற்றிய கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

அப்போது சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் பேசுகையில், 50 ஆண்டுகளுக்கு முன் திபெத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஜனநாயக சீர்திருத்தம், திபெத் வரலாற்றில் மிக பரந்த மிக ஆழமாக, முன்னேற்ற முக்கியத்துவம் மிகுந்த சமூக மாற்றமாகும். உலக மனித உரிமை இலட்சியத்தில் சீன மக்கள் ஆற்றிய முக்கிய பங்கும் ஆகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலும், சோஷலிச தாயக குடும்பத்தில் தான், திபெத்தின் சமூகமும் பொருளாதாரமும் பாய்ச்சல் வளர்ச்சியடைய முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

திபெத்தின் இன்றைய நல்வாழ்வைப் பேணிமதிக்க வேண்டும். சீனா மற்றும் திபெத் தனிச்சிறப்பியல்புடைய வளர்ச்சி பாதையை உறுதிப்படுத்தி, பல்வேறு இன மக்கள் குறிப்பாக விவசாயிகள் மற்றும் ஆயர்களின் உற்பத்தி வாழ்க்கை நிலைமைகளை மேலும் மேம்படுத்தி, திபெத்தின் அடிப்படை நிதானம் நீண்டகால அமைதியாக இருப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் ஹுசிந்தாவ் வலியுறுத்தினார்.